Advertisement


ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி தோல்வி

பிப்ரவரி 02, 2019 21:30
 Comments  
 


ISL Football, Chennai, Pune City
 

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் சென்னை அணி 1–2 என்ற கோல் கணக்கில் புனேயிடம் வீழ்ந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 5வது சீசன் நடக்கிறது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணி, புனே அணியை எதிர்கொண்டது. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியின் 55வது நிமிடத்தில் சென்னை அணியின் சி.கே. வினீத் முதல் கோலடித்தார். இதற்கு, 55வது நிமிடத்தில் புனே அணியின் மார்சிலினோ ஒரு கோலடித்து பதிலடி தந்தார். தொடர்ந்து அசத்திய புனே அணிக்கு 60வது நிமிடத்தில் ஆஷிக் குருனியான் ‘பாஸ்’ செய்த பந்தில் மார்சிலினோ மீண்டும் ஒரு கோலடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய சென்னை அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் சென்னை அணி 1–2 என்ற கணக்கில் 11வது தோல்வியை பெற்றது.

இதுவரை விளையாடிய 14 போட்டியில், ஒரு வெற்றி, 11 தோல்வி, 2 ‘டிரா’ என, 5 புள்ளிகளுடன் சென்னை அணி கடைசி இடமான 10வது இடத்தில் நீடிக்கிறது. நான்காவது வெற்றியை (13 போட்டி, 2 ‘டிரா’, 7 தோல்வி) பதிவு செய்த புனே அணி, 14 புள்ளிகளுடன் 7வது இடத்தில் தொடர்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?