Advertisement


வெல்லுமா நம்ம சென்னை

பிப்ரவரி 01, 2019 22:07
 Comments  
 


isl, chennai soccer team
 

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்து விட்ட சென்னை அணி இன்று சொந்தமண்ணில் புனேயை சந்திக்கிறது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் லீக் முறையில் மோதுகின்றன. முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பெறும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு (அரையிறுதி) முன்னேறும்.

இத்தொடரில் இரு முறை (2015, 2017–18) சாம்பியன் ஆனது சென்னை அணி. இந்த சீசனில் என்ன ஆனதோ தெரியவில்லை, இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு சொதப்புகிறது.  பயிற்சியாளர் ஜான் கிரகரியும் எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்க்கிறார். ஒன்றும் பிடிபடவில்லை.

‘நடப்பு சாம்பியன்’ ஆன சென்னை (5 புள்ளி) 13 போட்டிகளில் 1ல் மட்டும் வென்றது (புனே). 2ல் ‘டிரா’ செய்து, 10ல் தோற்று, பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த சீசனில் அணியில் இணைந்த வினீத், ஹாலிசரண் நர்ஜரி பெரியளவில் ஏமாற்றம் தந்தார். தன்பால் கணேஷ் காயம், முன்னணி வீரர் ஜீஜே ‘பார்மிற்கு’ திரும்ப முடியாமல் அவதிப்படுவது, கேப்டன் மெய்ல்சன் ‘சஸ்பெண்ட்’, இனிகோ கால்ட்ரன் விலகல் என எல்லாம் சேர்ந்து சென்னை அணிக்கு சோகத்தை தந்துள்ளது.

இதுவரை 13 போட்டியில் 13 கோல் தான் அடிக்கப்பட்டது. எதிரணிக்கு 25 கோல்கள் விட்டுத்தந்தனர். சமீபத்திய ஆசிய கோப்பை தொடர் தந்த நம்பிக்கையில் ஜீஜே, அனிருத் தபா உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டால் சொந்தமண்ணில் சாதிக்கலாம்.

இத்தொடரில் சென்னை அணி வீழ்த்திய ஒரே அணி புனே தான். இன்று இவர்களை மீண்டும் சந்திப்பதால் உற்சாகத்துடன் செயல்பட்டு, தொடர்ச்சியான நான்கு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அடுத்து சூப்பர் கோப்பை, ஆசிய கிளப் தொடரில் பங்கேற்கவுள்ள சென்னை அணிக்கு இன்றைய வெற்றி உற்சாகம் தரலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?