Advertisement


டேவிஸ் கோப்பை: இந்தியா ஏமாற்றம்

பிப்ரவரி 01, 2019 22:01
 Comments  
 


ramkumar, india, davis cup, tennis
 

கோல்கட்டா: இத்தாலி அணிக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதிச்சுற்று ஒற்றையர் பிரிவு போட்டிகளில் ராம்குமார் ராமநாதன், குன்னேஸ்வரன் தோல்வியடைந்தனர்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் முதன்முறையாக ‘பைனல்ஸ்’ சுற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் நவம்பர்18–24ல் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடக்கவுள்ள இதில்மொத்தம் 18 அணிகள் பங்கேற்கும்.இதற்குகுரோஷியா, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் முன்னேறிவிட்டன. மீதமுள்ள 12 இடங்களுக்கான தகுதிச்சுற்று தற்போது நடக்கிறது.

மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில் நடக்கும் தகுதிச்சுற்றில் இந்தியா, இத்தாலி அணிகள் மோதுகின்றன. முதல் ஒற்றையர் பிரிவு போட்டியில் தரவரிசையில் 133வது இடத்திலுள்ள தமிழகத்தின் ராம்குமார் ராமநாதன், இத்தாலியின் ஆண்ட்ரியாஸ் செப்பியை (37வது இடம்) சந்தித்தார். முதல் செட்டை 4–6 என பறிகொடுத்த ராம்குமார், அடுத்த செட்டையும் 2–6 என இழந்தார். முடிவில் ராம்குமார் 4–6, 2–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

இரண்டாவது ஒற்றையர் பிரிவு போட்டியில் தமிழகத்தின்பிரஜ்னேஷ்குன்னேஸ்வரன் (102வது இடம்), 53வது இடத்திலுள்ளமாட்டியோ பெரேட்டினியைஎதிர் கொண்டார். டேவிஸ் கோப்பையில் பெரேட்டினி அறிமுக வீரர் என்பதால் குன்னேஸ்வரன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் செட்டை 4–6 என தவறவிட்ட இவர், அடுத்த செட்டையும் 3–6 என இழந்தார். 57 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில், குன்னேஸ்வரன் 4–6, 3–6 என வீழ்ந்தார்.

முதல் நாளில் 0–2 என இந்தியா பின்தங்கியதால், இன்று நடக்கவுள்ள இரட்டையர் பிரிவில் போபண்ணா– திவிஜ் சரண் ஜோடி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?