Advertisement


கத்தார் ‘ஆசிய சாம்பியன்’: ஜப்பான் அணி ஏமாற்றம்

பிப்ரவரி 01, 2019 21:35
 Comments [1]  
 


Asia Cup Football, Qatar, Champion, Japan, Runner Up
 

அபுதாபி: ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் கத்தார் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில், 3–1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வென்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) ஆண்களுக்கான 17வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. அபுதாபியில் நடந்த பைனலில், ‘பிபா’ உலக தரவரிசையில் 50வது இடத்தில் உள்ள ஜப்பான் அணி, 93வது இடத்தில் உள்ள கத்தார் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் கத்தார் அணிக்கு அல்மோஸ் அலி முதல் கோலடித்தார். பின், 27வது நிமிடத்தில் அக்ரம் ஹசன் ஆபிப் ‘பாஸ்’ செய்த பந்தில் கத்தார் வீரர் அப்துலாஜிஸ் ஹடேம் ஒரு கோலடித்தார். இதற்கு ஜப்பான் அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் கத்தார் அணி 2–0 என, முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஜப்பான் அணிக்கு 69வது நிமிடத்தில் மினாமினோ ஒரு கோலடித்தார்.  இம்மகிழ்ச்சி நிலைக்கவில்லை. ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் கத்தார் அணியின் அக்ரம் ஹசன் ஆபிப் ஒரு கோலடித்து 3–1 என, வலுவான முன்னிலை பெற்றுத் தந்தார். நான்கு முறை ஆசிய கோப்பை வென்ற ஜப்பான் அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் கத்தார் அணி 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு முத்தமிட்டது. இதன்மூலம் ஆசிய கோப்பை வென்ற 9வது அணி என்ற பெருமை கத்தாருக்கு கிடைத்தது. ஏற்கனவே ஜப்பான் 4 (1992, 2000, 2004, 2011), சவுதி அரேபியா (1984, 88, 96), ஈரான் (1968, 72, 76) தலா 3, தென் கொரியா 2 (1956, 1960), இஸ்ரேல் (1964), குவைத் (1980), ஆஸ்திரேலியா (2015), ஈராக் (2007) தலா ஒரு முறை கோப்பை வென்றிருந்தன. இம்முறை கத்தார் அணி 100 சதவீத வெற்றியுடன் ஆசிய கோப்பை வென்றது.

தவிர, வரும் 2021ல் நடக்கவுள்ள ‘பிபா’ கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து தொடருக்கு கத்தார் அணி தகுதி பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  


Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?