Advertisement


சென்னையில் சர்வதேச புல்தரை கால்பந்து மைதானம்

ஜனவரி 30, 2019 22:59
 Comments [2]  
 


chennai fc, soccer ground, international
 

சென்னை: தமிழகத்தின் முதல் ‘பிபா’ சர்வதேச தரத்திலான செயற்கை புல்தரை கால்பந்து மைதானத்தை சென்னை துரைப்பாக்கத்தில் எப்.சி., மெட்ராஸ் கிளப் அமைத்து உள்ளது.

சென்னை, துரைப்பாக்கத்தில், அரிந்தம் பிஸ்வாஸ், ஜோசப் வாஸ் சேர்ந்து எப்.சி., மெட்ராஸ் கிளப்பை நிறுவினர். இந்தியா முழுவதும் கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் 13, 15 வயதிற்குட்பட்ட 32 சிறுவர்களை தேர்வு செய்து உள்ளனர். அவர்களுக்கு, எப்.சி., மெட்ராஸ் சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது

தொடர்ந்து திறமையான கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கத்துடன் சென்னை துரைப்பாக்கத்தில் செயற்கை புல்தரை கால்பந்து மைதானத்தை அமைத்துள்ளனர்.

எப்.சி., மெட்ராஸ் நிறுவனர் அரிந்தம் பிஸ்வாஸ் கூறுகையில்,‘‘வீரர்களுக்கு பயிற்சி அளிக்க போதிய இடவசதி இல்லாமல் திணறிய போது கிரிஷ் மாத்ரூ பூதம், இடம் வழங்கிய ரமணீயம் ஜெகநாதன் பல கோடி  ரூபாய்  செலவழித்து  சர்வதேச செயற்கை ஆடுகளத்தை உருவாக்கி கொடுத்தனர்,’’ என்றார்.

எப்.சி., மெட்ராஸ், முதன்மை செயல் அதிகாரி ஜோசப் வாஸ் கூறுகையில், ‘‘செயற்கை ஆடுகளத்தை அமைக்க கடந்த ஆண்டு முயற்சி எடுத்தோம். எந்தவித வருமானத்திற்காவும் துவங்கப்படவில்லை.சிறந்த வீரர்களை உருவாக்குவதே கனவு,’’என்றார்.

செயல் தலைவர் நிர்மல் குமார் கூறுகையில்,‘‘மொத்தம் 25 பயிற்சியாளர்கள் உள்ளனர். பல்வேறு இடங்களுக்கு சென்று வீரர்களை தேர்வு செய்கின்றனர்.12 வயதில் பயிற்சியில் ஈடுபடும் வீரர், 18 வயதில் ஆட்ட நுணுக்கத்தில் சிறந்து விளங்குவது உறுதி,’’என்றார்.

வெ.பிரசன்னா (வயது –25) 

கால்பந்து பயிற்சியாளர்

நான், 2006ல் எப்.சி., மெட்ராசில், விளையாட்டு, 12 வயதில் வீராக சேர்ந்தேன்.  தற்போது இங்கு பயற்சியாளாக பணியாற்றுகிறேன். 4 இருந்து 8 வயதினருக்கு, மற்றும் 16 வயதினருக்கு வரை பயிற்சி அளித்து வருகிறோம்.  விடுதியில், 35 பேர் உள்ளன். அவர்கள் பல்வேறு மாநிலத்தில் வந்து இருக்கின்றனர். நான் சிறு வயதில் இருந்து அவர்களை உருவாக்கி வருகிறோம்.

 

எல்.ஏ. லீயோநாடோ 9 (வயது– 13)

யூ– 13 வீரர்

நான் சென்னை வில்லிவாக்கத்தில் பிறந்து, தனியார் பள்ளியில் படித்து வந்தேன். தற்போது, எப்.சி., மெட்ராஸ்  கிளப்பில்  எட்டாம் வகுப்பு படித்து வருகிறேன். இதற்கு முன்பு என்னை விளையாட்டில் பந்தை ‘பாஸ்’ மட்டும்  பங்கேற்பேன். இங்கு வந்தது தான் பல்வேறு  நுணுக்கங்களை கற்று கொண்டேன். வாரத்தில் இரண்டு நாட்கள், உடற்பயிற்சி கல்வியும் கொடுக்கிறார்கள். என் அப்பா அம்மாவிற்கு இங்கு நான் பயற்சி பெருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இங்கு நல்ல வசதியுடன் பாதுகாப்புடன் இருக்கிறேன்.

 

அரங்கத்தின் விபரம் :

* ‘பிபா’ தரத்தில் 100 மீ., நீளம், 65 மீ., அகலம்.  

* முழு செயற்கை புல்தரை

* வீரர்களுக்கான ‘டிரெசிங்’ அறைகள்

* சாலையில் இருந்து, நான்கு அடிக்கு உயரத்தில்  அமைக்கப்பட்டுள்ளது.

* அரங்கத்தில் கீழ்பகுதியில் மழைநீர் வடிவால் வசதி 

* எந்த நேரத்தில் விளையாடலாம்

* புல்தரைக்கு எட்டு ஆண்டு வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.

* சர்வதேச  உட்பட, அனனைத்து வீதமான போட்டிகளும் இங்கு நடத்தலாம்.  

*  பாராமரிப்பு பணி மற்றும செலவுகள் குறைவு

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
MB VISWANATHAN 2 weeks ago | Report abuse
நைஸ் அட்டெம்ப்ட். காங்கிரதுலேஷன்ஸ் அண்ட் கோட் ப்ளேசஸ் தி பாய்ஸ்.


//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
s ramanathan 2 weeks ago | Report abuse
குட் மொவேமென்ட் போர் இந்தியா பாத பல் பிளேயர்ஸ்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?