Advertisement


சிந்து, ஸ்ரீகாந்த் வாய்ப்பு * ஒலிம்பிக் திட்டத்தில்...

ஜனவரி 30, 2019 22:24
 Comments  
 


Target Olympic Podium Scheme Kidambi Srikanth, PV Sindhu, cyclists, para athletes
 

புதுடில்லி: ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் பாட்மின்டன் நட்சத்திரங்கள் சிந்து, செய்னா நேவல், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 26 பேர் சேர்க்கப்பட்டனர்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் திறமை கொண்டவர்களை கண்டறிந்து அவர்களது பயிற்சிக்கு உதவி செய்து மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. 2020 டோக்கியோ, 2024 (பாரிஸ்) ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் புதிய நட்சத்திரங்களை சேர்க்க இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்.ஏ.ஐ.,) சார்பில் நேற்று ஆலோசனை நடந்தது.

முடிவில் பாட்மின்டனில் இருந்து சிந்து, வீரர் ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, செய்னா நேவல் உள்ளிட்ட 8 பேர் சேர்க்கப்பட்டனர். சமீபத்திய ஜூனியர் ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 10 பதக்கங்கள் வென்றது. இதனால் 2024 ஒலிம்பிக்கிற்கு தயார் செய்யும் வகையில் எசோவ் ஆல்பன், ரொனால்டோ சிங் உள்ளிட்ட 4 வீரர்கள் இடம் பெற்றனர்.

2020 பாரா ஒலிம்பிக்கிற்காக வருண் பட்டி, ஷரத் குமார் உள்ளிட்ட 9 பேர் சேர்க்கப்பட்டனர். 2016 ரியோ பாராலிம்பிக், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பனுக்கு இடம் கிடைக்கவில்லை.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?