Advertisement


வினேஷ் போகத் நம்பிக்கை

ஜனவரி 27, 2019 22:30
 Comments  
 


vinesh phogat, wrestling, india, olympic
 

மும்பை: ‘‘வரும் டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா எப்படியும் 2 அல்லது 3 பதக்கங்கள் கைப்பற்றும்,’’ என வினேஷ் போகத் தெரிவித்தார்.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 24. ஆசிய விளையாட்டில் தங்கம் கைப்பற்றி அசத்தியவர். டோக்கியோ ஒலிம்பிக் (2020) குறித்து இவர் கூறியது: சிறு வயதில் சரி, தவறு என எதுவாக இருந்தாலும் பிடிவாதமாகத் தான் இருப்பேன். செய்வது தவறு என்றாலும் வேறு வழியில்லாத நிலையில் அதை ஏற்றுக் கொள்வர். எனது இந்தக் குணம் தான் மல்யுத்த களத்தில் சாதிக்க உதவியது என நம்புகிறேன். எதிர்த்து நிற்பவரின் உடல் பலத்தை பார்த்து பயப்பட மாட்டேன். இது தான் எனது வெற்றிக்கு காரணம் என்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இது கடவுள் கொடுத்த பரிசு.

பதக்கம் உறுதி

இந்திய அணியில் தற்போதுள்ள மல்யுத்த நட்சத்திரங்களில் 4 முதல் 5 பேர் வரை வலிமையாக உள்ளனர். உலகின் எந்த மல்யுத்த நட்சத்திரத்தையும் வீழ்த்தும் திறன் படைத்தவர்கள். யார் யார் என்று சொல்ல விரும்பவில்லை. ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் எப்படியும் இந்தியாவுக்கு 2 அல்லது 3 பதக்கங்கள் கிடைப்பது உறுதி. ஏனெனில் நமது வீரர், வீராங்கனைகளின் மனநிலை முற்றிலும் மாறி விட்டது. துவக்கத்தில் போட்டிகளில் பங்கேற்பது அல்லது ஏதாவது ஒரு சில போட்டிகளில் வெல்வதுமாக இருந்தனர். தற்போது அப்படியல்ல முடிந்தவரை பதக்கம் வெல்ல போராடுகின்றனர். ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் கைப்பற்றிய சாக் சி மாலிக் திறமையானவர். அடுத்த ஒலிம்பிக்கில் இவர் எப்படியும் தங்கம் வெல்வதை லட்சியமாக வைத்துள்ளார். இவ்வாறு வினேஷ் போகத் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?