Advertisement


‘லக்கி’ பொண்ணு செய்னா!

ஜனவரி 27, 2019 15:24
 Comments [1]  
 


saina, Indonesia Masters 2019, badminton
 

ஜகார்த்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பைனலில் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள இந்தியாவின் செய்னா, ‘நம்பர்–4’ வீராங்கனையும் ‘நடப்பு’ உலக சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) எதிர் கொண்டார்.

முதல் செட்டில் கரோலினா 9–2 என முன்னிலையில் இருந்தார். அப்போது, இவர் செய்னா அடித்த பந்தை திருப்பி அனுப்ப முயற்சி செய்தபோது, தவறிவிழுந்தார். வலது முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் வலியால் துடித்தார். சில நிமிடத்திற்குப்பின் மீண்டு வந்த இவர், 10–4 என முன்னிலையில் இருந்தபோது, வலி அதிகமாக களத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். போட்டியிலிருந்து பாதியில் விலக, செய்னாவுக்கு யோகம் அடித்தது. இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, சாம்பியன் பட்டம் வென்றார்.

மகிழ்ச்சி இல்லை

செய்னா கூறுகையில்,‘‘ கரோலினா வேதனையால் துடித்தது வருத்தத்தை தந்தது. ரியோ ஒலிம்பிக்கில் (2016) முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டபோது கண்ணீர் விட்டு அழுதேன். முதல் செட்டில் கரோலினா முன்னிலையில் இருந்தார். இவரிடம் போராடி வெற்றி பெற எண்ணினேன். இப்படிப்பட்ட முறையில் பட்டம் வென்றது மகிழ்ச்சியாக இல்லை,’’ என்றார்.

1

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை செய்னா தட்டிச்சென்றார். இரண்டாவது இந்திய நட்சத்திரமானார். இதற்கு முன், 2014ல் ஆண்கள் ஒற்றையரில் பிரனாய் கோப்பை வென்றிருந்தார்.

2

உலக பாட்மின்டன் கூட்டமைப்பு நடத்தும் தொடர்களில் செய்னா 2 ஆண்டுக்குப்பின் கோப்பை வென்றுள்ளது. இதற்கு முன், 2017ல் மலேசியா மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தி இருந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
sasi 3 weeks ago | Report abuse
லக் ல ஒன்னும் இல்ல அப்படி இருந்த பைனல் வரைக்கும் வந்திருக்க முடியாது




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?