Advertisement


ஆஸி., ஓபன்: ஒசாகா சாம்பியன்

ஜனவரி 26, 2019 16:47
 Comments  
 


Australian Open Tennis, Naomi Osaka, Japan, Champion
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். பைனலில் 7–6, 5–7, 6–4 என்ற கணக்கில் செக்குடியரசின் கிவிட்டோவாவை தோற்கடித்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்–4’ ஜப்பானின் நவோமி ஒசாகா, 6வது இடத்தில் உள்ள செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா மோதினர். இருவரும் மாறி, மாறி ‘கேம்’ வெல்ல, முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இதில் அபாரமாக ஆடிய ஒசாகா 7–6 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய ஒசாகா, 2வது செட்டில் ஒரு கட்டத்தில் 5–3 என முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் எழுச்சி கண்ட கிவிட்டோவா, 2வது செட்டை 7–5 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் சுதாரித்துக் கொண்ட ஒசாகா 6–4 என வென்றார்.

முதன்முறை: இரண்டு மணி நேரம், 27 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் ஒசாகா 7–6, 5–7, 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய ஓபனில் முதன்முறையாக கோப்பை வென்றார். இது, இவரது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே கடந்த ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்றிருந்தார். இதன்மூலம் இவர், டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தை உறுதி செய்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?