Advertisement


சறுக்கினார் பெடரர்... ‘ஷாக்’ ஆன ஷரபோவா

ஜனவரி 20, 2019 18:25
 Comments  
 


Tsitsipas knocks defending champion Federer
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றில் ‘நடப்பு சாம்பியன்’ பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பெண்கள் பிரிவில் கெர்பர், ஷரபோவா தோல்வியடைந்தனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடக்கிறது.இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் உலகின் ‘நம்பர்–3’ வீரரும் நடப்பு சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் பெடரர், தரவரிசையில் 15வது இடத்திலுள்ள கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபசை சந்தித்தார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பெடரர் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு மாறாக துவக்கத்திலேயே நெருக்கடி தந்தார் ஸ்டெபானஸ்.

‘டை–பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை 37 வயதான பெடரர் 7–6 என போராடி வென்றார். அடுத்த இரண்டு செட்டையும் 7–6, 7–5 என ஸ்டெபானஸ் (17 வயது) வசப்படுத்தினார். நான்காவது செட்டில் பெடரர் 6–7 என சறுக்கினார். மூன்று மணி நேரம் 45 நிமிடம் நீடித்த ‘மாரத்தான்’ போட்டியின் முடிவில் பெடரர் 7–6, 6–7, 5–7, 6–7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

நடால் முன்னேற்றம்

மற்றொரு நான்காவது சுற்றில் ‘நம்பர்–2’ வீரரான ஸ்பெயினின் நடால், 6–0, 6–1, 7–6 என செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். 

மற்ற போட்டிகளில் வென்ற ஸ்பெயினின் பட்டிஸ்டா, அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ காலிறுதிக்கு முன்னேறினர்.

ஷரபோவா ஏமாற்றம்

பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ‘நம்பர்–2’ வீராங்கனையான ஜெர்மனியின் கெர்பர் 0–6, 2–6 என  அமெரிக்காவின் டேனியல்லா காலின்சிடம் வீழ்ந்தார்.

செக் குடியரசின் கிவிட்டோவா 6–2, 6–1 என அமெரிக்காவின் அமான்டா அனிசிமோவாவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

ரஷ்யாவின் ஷரபோவா 6–1, 1–6, 4–6 என ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டியிடம் வீழ்ந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?