Advertisement


‘சூப்பர் ஸ்டார்’ தோனி * ஆஸி., பயிற்சியாளர் பாராட்டு

ஜனவரி 19, 2019 22:06
 Comments  
 


Dhoni is a superstar and all time great Australian coach Justin Langer
 

 மெல்போர்ன்: ‘‘கிரிக்கெட் அரங்கின் எந்த காலத்துக்கும் சிறந்த வீரர்களில் ஒருவர் தோனி. இவருக்கு எதிராக விளையாடுவது இளம் வீரர்களுக்கு சிறந்த  பாடமாக இருக்கும். கிரிக்கெட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ தோனி,’’ என ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (2–1) முதன் முறையாக வென்று சரித்திரம் படைத்தது இந்திய அணி. இதற்கு முக்கிய காரணமாக இருந்தார் விக்கெட் கீப்பர் தோனி 37. முதல் போட்டியில் 96 பந்தில் 51 ரன் எடுத்த போது கடுமையாக விமர்சனம் எழுந்தது. அடுத்து 54 பந்தில் 55 ரன்கள் எடுத்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார்.

மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் 87 ரன்கள் (114 பந்து) எடுத்து மீண்டும் சிறப்பாக ‘பினிஷிங்’ செய்து தர, ஆஸ்திரேலிய மண்ணில் முதன் முறையாக, 2014க்குப் பின் (இங்கிலாந்து) ஒருநாள் அரங்கில் மீண்டும் தொடர் நாயகன் ஆனார். 

கடந்த ஆண்டு 20 போட்டிகளில் ஒருமுறை கூட அரைசதம் அடிக்காத தோனி, புத்தாண்டில் ‘ஹாட்ரிக்’ அரைசதம் விளாசியதால், பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியது:

தோனிக்கு 37 வயதாகிறது. ஆடுகளத்தில் ரன்கள் எடுக்க ஓடுவது, அவரது உடற்தகுதி என அனைத்தும் இன்னும் உச்சபட்ட ‘பார்மில்’ உள்ளன. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ரன்கள் எடுக்கச் சொன்னால் கூட தயாராக இருப்பார் போல. 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்றாலும் சளைக்காமல் ஓடுகிறார். உண்மையில் கிரிக்கெட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ தோனி தான். கிரிக்கெட் மீது இவரைப் போல ஆஸ்திரேலிய வீரர்கள் ஆர்வமாக இருக்க வேண்டும். 

சிறந்த ‘ரோல் மாடல்’

தோனி, கோஹ்லி, டெஸ்டில் புஜாரா உள்ளிட்டோர் எங்களுக்கு ‘ரோல் மாடலாக’ திகழ்கின்றனர். தோனியை பொறுத்தவரையில் கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என, பல பிரிவுகளில் அவரது சாதனைகள் வியக்கவைக்கின்றன. இவர் எந்த காலத்துக்கும் சிறந்த வீரர்களில் ஒருவர். இவரைப் போன்ற வீரர்களுக்கு எதிராக விளையாட கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

தோனியைப் போன்ற சிறந்த வீரர்களுக்கு களத்தில் மீண்டும் வாய்ப்பு கொடுத்துவிடக் கூடாது. ஒரு சில முறை தவறவிட்டால் அப்புறம் போட்டியில் தோற்க வேண்டியது தான். இது எங்கள் வீரர்களுக்கு சிறந்த பாடம். 

இவ்வாறு ஜஸ்டின் லாங்கர் கூறினார். 

 

45

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அணியின் வெற்றிக்கான ரன்னை அதிக முறை அடித்தவர்கள் வரிசையில் தோனி முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 45 முறை இதுபோல சாதித்தார். அடுத்தடுத்த இடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் (33), பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக் (32), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (31) உள்ளனர். 

 

112

ஒருநாள் அரங்கில் வெற்றிகரமாக ‘சேஸ்’ செய்த போட்டிகளில் அதிக முறை பொறுப்பாக செயல்பட்ட வீரர்களில் தோனி (112 முறை) இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் (127) உள்ளார். ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (111) மூன்றாவதாக உள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?