Advertisement


அரையிறுதியில் செய்னா தோல்வி

ஜனவரி 19, 2019 13:15
 Comments  
 


Saina loses to Marin, Malaysia Masters
 

கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் செய்னா நேவல் தோல்வியடைந்தார். 

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள இந்தியாவின் செய்னா, நடப்பு உலக சாம்பியனான ‘நம்பர்–6’ வீராங்கனை ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர் கொண்டார். முதல் செட்டை 16–21 என இழந்த செய்னா, அடுத்த செட்டையும் 13–21 என பறிகொடுத்தார். 40 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், செய்னா 16–21, 13–21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். 

இத்தொடரில் கடந்த 2011ல் பைனலில் வீழ்ந்த செய்னா, 2017ல் கோப்பை வென்றார். இம்முறை அரையிறுதியுடன் திரும்பினார். இத்துடன் இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?