கிரிக்கெட்
 

இர்பானுக்கு "உம்மா' கொடுக்க முயன்ற ரசிகை

18-08-2009 IST
 

கோல்கட்டா : பத்திரிகை போட்டோகிராபர்கள், "டிவி' கேமராமேன்கள் முன்னிலையிலேயே, இர்பான் பதானுக்கு "இறுக்கி அணைச்சு ஒரு முத்தம் கொடுக்க முயன்ற' இளம் ரசிகை இர்பானின் சாதுர்யத்தால் தடுத்து நிறுத்தப்பட்டார். கோல்கட்டாவில் நேற்று நடந்த தனியார் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க இர்பான் பதான், தனது சகோதரர் யூசுப் பதானுடன் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில், தேர்வு செய்யப்பட்ட மூன்று பேர், பதான் சகோதரர்களுடன் இணைந்து "போட்டோ' எடுத்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். இதில் ஷபினா ஹாடன் என்ற 24 வயது ரசிகையும் ஒருவர்.

கிடைத்த வாய்ப்பை "சரியாக' பயன்படுத் திக்கொள்ள நினைத்தார் ரசிகை. பதான் உயரத்தை விட, ரசிகையின் உயரம் குறைவாக இருந்ததால், அவரது கழுத்தைப் பிடித்து இழுத்து முத்தம் கொடுக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத பதான், உடனே சுதாரித்துக் கொண்டு, ரசிகையின் பிடியிலிருந்து தப்பித்து, அவரை விலக்கிவிட்டார். ரசிகையின் செய்கையால் பதான் கோபப்படவில்லை. ரசிகையும் பெரிதாக வெட்கப்படவில்லை.

முத்தம் கொடுக்க முயன்ற சம்பவத்தால், இந் நிகழ்ச்சியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய அணியில் சிறந்த "ஆல்-ரவுண்டராக' விளங்குபவர் இர்பான் பதான். சமீபத்திய போட்டிகளில் "பார்மின்றி' தவித்து வந்ததால், இலங்கையில் நடக்கவுள்ள முத்தரப்பு ஒருநாள் (செப். 8-14) மற்றும் தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி (செப். 22-அக். 5) தொடர்களுக்கு தேர்வு செய்யப்படவில்லை. இர்பான் பதானுக்கும், யூசுப் பதானுக்கும் திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் யோசித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் வசிக்கும் வீடு விரிவுபடுத் தப்பட்டு வருகிறது.

இதேபோல் கடந்த 2007ம் ஆண்டு கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம் அருகில், கேப்டன் தோனிக்கு இளம் ரசிகை முத்தம் கொடுக்க முயன்ற நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

 
 
Print this page நகல் எடுக்க     |     எழுத்தின் அளவு: Decrease font Decrease font    |      |    
வாசகர் கருத்து



    முதல் பக்கம் விளையாட்டு முதல் பக்கம் கிரிக்கெட் முதல் பக்கம்    
 
 
© Copyrights 2008, Dinamalar. All rights reserved.  Contact Us