வெற்றி வீரர்கள்
 

அவ்வளவுதானா இவானோவிச்...

17-07-2009 IST
 

செர்பியாவின் டென்னிஸ் நட்சத்திரம் அனா இவானோவிச். முன்னாள் "நம்பர்-1' வீராங்கனை. கடந்த 2008ல் பிரெஞ்ச் ஓபன் கோப்பை வென்றார். இதுதான் இவர் பெற்ற ஒரே கிராண்ட்ஸ்லாம் பட்டம். அதன் பிறகு எந்த பட்டமும் வெல்லவில்லை.

பிரெஞ்ச் ஓபன் தவிர, ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், யு.எஸ்., ஓபன் என்ற 3 கிராண்ட்ஸ்லாம் தொடர்களும் இவருக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை நடந்த 3 கிராண்ட்லாம் போட்டிகளிலும் காலிறுதிக்கு கூட தகுதி பெறவில்லை. விளைவு சர்வதேச டென்னிஸ் ரேங்கிங்கில் 11வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். தொடர்ந்து அறிமுகம் இல்லாத வீராங்கனைகளிடம் கூட தோல்வியடைந்து விடுகிறார். சரி, பயிற்சியாளர் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்து அதையும் செய்து பார்த்துவிட்டார். ஆனால் வெற்றி தான் வந்த பாடில்லை.சமீபத்தில் நடந்து முடிந்த விம்பிள்டனில் காயம் காரணமாக நான்காவது சுற்றின் பாதியில், அழுது கொண்டே வெளியேறினார்.

இதுகுறித்து இவானோவிச் கூறியது:விம்பிள்டனில் பாதியில் வெளியேறியது மிகுந்த ஏமாற்றமான முடிவு. அடுத்தடுத்து போட்டிகள் விளையாட வேண்டிய நிலையில் காயம் பெரிதும் வேதனைப் படுத்தியது. அன்று மிகுந்த வலி இருந்ததால் தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேறினேன். இந்த காயம் இவ்வளவு இடைஞ்சல் தரும் என தெரியாது. ஆனால் பெரிய அளவில் காயம் இல்லை. சதையில் சிறிய அளவில் மட்டும் கிழிசல் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

வீனசுக்கு பாராட்டு: வீனஸ் வில்லியம்ஸ் திறமையை பாராட்டுகிறேன். புல்தரையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். பந்து செல்லும் திசையில் சென்று அதிக ஆற்றலுடன் திருப்பி அனுப்புவார்.

மீண்டும் சாதிப்பேன்: விம்பிள்டனில் இம்முறை சமந்தா ஸ்டோசுருக்கு எதிரான எனது ஆட்டம், இந்த ஆண்டின் மறக்க முடியாத போட்டியாகும். புதிய பயிற்சியாளர் வந்த பிறகு எனது ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் கிடைத்த ஓய்வுக்கு பிறகு, மீண்டும் சாதிக்க முயற்சிப்பேன். இவ்வாறு இவானோவிச் தெரிவித்தார்.

 
 
 
Print this page நகல் எடுக்க     |     எழுத்தின் அளவு: Decrease font Decrease font    |      |    
    முதல் பக்கம் விளையாட்டு முதல் பக்கம்    
 
 
© Copyrights 2008, Dinamalar. All rights reserved.  Contact Us