Advertisement


ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி: ஆஸி., ஓபனில் ஏமாற்றம்

ஜனவரி 14, 2019.
 Comments  
 


Australian Open Tennis, Andy Murray, England
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் ராபர்டோ பாடிஸ்டா அகுட் மோதினர்.

முதலிரண்டு செட்டை 4–6, 4–6 என இழந்த ஆன்டி முர்ரே, பின் எழுச்சி கண்டு ‘டை பிரேக்கர்’ வரை சென்ற அடுத்த இரண்டு செட்களை 7–6, 7–6 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் ஏமாற்றிய முர்ரே 2–6 எனக் கோட்டைவிட்டார்.

நான்கு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் ஆன்டி முர்ரே 4–6, 4–6, 7–6, 7–6, 2–6 என்ற செட் கணக்கில் போராடி அதிர்ச்சி தோல்வியடைந்தார். இவர், சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபனுடன் ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்தார். இதுவரை மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் (2013, 2016ல் விம்பிள்டன் மற்றும் 2012ல் யு.எஸ்., ஓபன்) வென்றிருந்த இவர், ஆஸ்திரேலிய ஓபனில் ஐந்து முறை (2010, 2011, 2013, 2015, 2016) பைனல் வரை சென்றிருந்தார். இதேபோல பிரெஞ்ச் ஓபனில் ஒரு முறை (2016) பைனலோடு திரும்பினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?