Advertisement


ஆஸி., ஓபன்: அசத்துவாரா பெடரர்

ஜனவரி 13, 2019.
 Comments  
 


Australian Open Tennis, Federer, Serena Williams
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பெடரர், செரினா உள்ளிட்டோர் கோப்பை வென்று சாதிக்க காத்திருக்கின்றனர்.

நடப்பு ஆண்டில் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் (ஜன. 14) மெல்போர்னில் துவங்குகிறது. ஆண்கள் பிரிவில் ‘நடப்பு சாம்பியன்’ ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இத்தொடரில் அதிக முறை (தலா 6) கோப்பை வென்றவர்கள் பட்டியலில் ஜோகோவிச் (செர்பியா), ராய் எமர்சனுடன் (ஆஸி.,) முதலிடத்தை பெடரர் பகிர்ந்து கொண்டுள்ளார். மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றால் 7 கோப்பை கைப்பற்றி சாதிக்கலாம். சமீபத்திய ஹோப்மேன் கோப்பை வென்று 37 வயதான பெடரர் நம்பிக்கை தருகிறார்.

‘நம்பர்–1’ வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை பொறுத்தவரை கடந்த முறை நான்காவது சுற்றுடன் நடையைக்கட்டினார். சமீபத்திய ஏ.டி.பி., பைனல்ஸ் தொடரின் பைனலில் ஜெர்மனியின் 21 வயதான அலெக்சாண்டர் ஜிவர்விடம் வீழ்ந்தார். இம்முறை சுதாரிப்புடன் இருந்தால் கோப்பையை வசப்படுத்தலாம்.

விடை பெறும் முர்ரே: தரவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள ஸ்பெயினின் நடாலும் ‘வின்னர்’ பட்டியலில் உள்ளார். தொடைப்பகுதி காயத்தால் பிரிஸ்பேன் தொடரிலிருந்து விலகினார். தற்போது, முழு உடற்தகுதியுடன் இருப்பதாக கூறி இருப்பதால், இவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர். பிரிட்டன் வீரர் முர்ரே பங்கேற்கும் கடைசி டெஸ்ட் தொடராக இது அமைந்துள்ளது. வெற்றியுடன் விடை கொடுக்க இவர் முயற்சிக்கலாம். இந்த நான்கு நட்சத்திரங்களுடன் நிஷிகோரி (ஜப்பான்), வாவ்ரின்கா (சுவிட்சர்லாந்து) உள்ளிட்டோரும் கோப்பையை தட்டிச்செல்ல காத்திருக்கின்றனர்.

மிரட்டும் செரினா: பெண்கள் பிரிவில் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள அமெரிக்காவின் செரினா இம்முறையும் முட்டி மோத தயாராக உள்ளார். 2017ல் இதே தொடரில் இரண்டு மாத கர்ப்பமாக இருந்த இவர், கோப்பை வென்றார். குழந்தை பிறந்தபின், விம்பிள்டன் மற்றும் யு.எஸ்., ஓபனில் பைனலுக்கு முன்னேறினார். இம்முறை அசத்தினால் ஒற்றையரில் அதிக முறை (24) கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவின் மார்க்ரெட் சாதனையை சமன் செய்யலாம். இவருடன் நடப்பு ‘சாம்பியன்’ வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஹாலப் (ருமேனியா), ஷரபோவா (ரஷ்யா) போன்ற வீராங்கனைகளும் சவால் தரலாம்.

ஜீவன் பங்கேற்பு

இந்தியா சார்பில் இம்முறை ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா, திவிஜ் சரண் ஜோடி பங்கேற்கிறது. அமெரிக்காவின் நிக்கோலஸ் மோன்ரோவுடன் இணைந்து தமிழகத்தின் ஜீவன் நெடுஞ்செழியன் விளையாட உள்ளார். ‘சீனியர்’ வீரர் பயஸ், மெக்சிகோவின் மிகுய்லுடன் களமிறங்குகிறார். ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் குன்னேஸ்வரன் மட்டும் பங்கேற்கிறார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?