Advertisement


கண்டேன் ‘பாய் பிரண்டு’ கண்டேன்!

ஜனவரி 13, 2019.
 Comments  
 


Eugenie Bouchard, tennis
 

போட்டியில் தனக்கு ஆதரவு தந்த ரசிகரை புதிய ‘பாய் பிரண்டாக’ ஏற்றுக்கொண்டார் பவுச்சர்டு.

கனடா டென்னிஸ் வீராங்கனை பவுச்சர்டு 24. கிராண்ட்ஸ்லாம் தொடரில் அதிகபட்சமாக விம்பிள்டனில் (2014) பைனல் வரை முன்னேறி உள்ளார். அழகான வீராங்கனையான இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். சமீபத்தில், நியூசிலாந்தில் நடந்த ஆக்லாந்து ஓபன் காலிறுதியில் வீழ்ந்தார். இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் சோபியாவுடன் இணைந்து கோப்பை வென்றார். இத்தொடரில், பவுச்சர்டை விடாமல் ரசிகர் ஒருவர் துரத்தினார். இவர் விளையாடியபோட்டியின்போது, ‘கேலரியில்’ அமர்ந்து கொண்டு சிவப்பு நிற துணியால் ஆன ‘பேனரை’ பிடித்திருந்தார். அதில்,’ வெற்றியோ, தோல்வியோ எப்போதும் பவுச்சர்டு மட்டும்தான்’ என, எழுதி இருந்தார். இதை கண்டு மனம் மகிழ்ந்த இவர் அந்த ரசிகரை கண்டுபிடித்து வாழ்த்து தெரிவித்ததுடன் ‘பாய் பிரண்டாக’ ஏற்றுக்கொண்டார்.

இது குறித்து பவுச்சர்டு ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ எனக்கு ஆதரவு தந்த ரசிகரை கண்டுபிடித்துவிட்டேன். இவரது பெயர் ஜெப்ரி.  நான் பங்கேற்கும் எல்லா தொடருக்கும் நேரில் வந்து ஆதரவு தருகிறார். இவரது அன்புக்கு மதிப்பு அளிக்கிறேன். இவர்தான் எனது புதிய ‘பாய் பிரண்டு’,’ என, தெரிவித்துள்ளார்.

20 மணி நேரம்

ஜெப்ரி கூறுகையில்,‘‘ பவுச்சர்டு குறித்து ‘பேனர்’ தயாரிக்க சுமார் 20 மணி நேரம் தேவைப்பட்டது. கடந்த வாரம் இவர் தங்கி இருந்த ஓட்டலின் வெளியில் காத்திருந்தேன். ஆனால், சந்திக்க முடியவில்லை. ஒருவழியாக இவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். கூட்டத்திலும் என்னை பார்த்து, எங்கிருந்து வருகிறேன் உள்ளிட்ட தகவலை கேட்டறிந்தார்.  அவரது ‘டுவிட்டர்’ கணக்கிலும் இணைத்துக்கொண்டார். ஆக்லாந்து ஓபன் இரட்டையர் பிரிவு பைனலுக்கான ‘டிக்கெட்டை’ இலவசமாக தந்தார். பவுச்சர்டிற்கு தொடர்ந்து ஆதரவு தருவேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?