Advertisement


ஆசிய கால்பந்து: ஈரான் வெற்றி

ஜனவரி 12, 2019.
 Comments  
 


Asian Cup Football, Iran, Vietnam
 

அபுதாபி: ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு ஈரான் அணி முன்னேறியது. லீக் போட்டியில் 2–0 என்ற கோல் கணக்கில் வியட்நாமை வீழ்த்தி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) ஆண்களுக்கான 17வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. அபுதாபியில் நடந்த ‘டி’ பிரிவு லீக் போட்டியில் வியட்நாம், ஈரான் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஈரான் அணிக்கு 38வது நிமிடத்தில் சர்தார் அஸ்மவுன் முதல் கோலடித்தார். இதற்கு வியட்நாம் வீரர்களால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் ஈரான் அணி 1–0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய ஈரான் வீரர் சர்தார் அஸ்மவுன், 69வது நிமிடத்தில் 2வது கோலடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய வியட்நாம் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் ஈரான் அணி 2–0 என்ற கணக்கில் தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் 6 புள்ளிகளுடன் ‘ரவுண்டு–16’ சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தது.

மற்றொரு ‘டி’ பிரிவு போட்டியில் ஈராக், ஏமன் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஈராக் அணி 3–0 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் ஈராக் அணி 6 புள்ளிகளுடன் ‘நாக்–அவுட்’ சுற்றுக்குள் நுழைந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?