Advertisement


பயஸ் ஜோடி 2வது இடம்

ஜனவரி 12, 2019.
 Comments  
 


Vietnam ATP Challenger Tennis, Leander Paes, Miguel Angel Reyes Varela, Runner Up
 

டா நங்: வியட்நாம் ஓபன் சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில் தோல்வியடைந்த இந்தியாவின் பயஸ், மெக்சிகோவின் மிகுயல் ஏஞ்சல் ஜோடி 2வது இடம் பிடித்தது.

வியட்நாமில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மெக்சிகோவின் மிகுயல் ஏஞ்சல் ரேய்ஸ்–வரேலா ஜோடி, சீனதைபேயின் செங்–பெங் ஹசிக், இந்தோனேஷியாவின் கிறிஸ்டோபர் ரங்கட் ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 3–6 என இழந்த பயஸ் ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6–2 எனக் கைப்பற்றி பதிலடி தந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டைபிரேக்கரில்’ ஏமாற்றிய இந்திய–மெக்சிகோ ஜோடி 9–11 எனக் கோட்டைவிட்டது.

முடிவில் பயஸ் ஜோடி 3–6, 6–2, 9–11 என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?