Advertisement


தமிழக அணி வெற்றி

ஜனவரி 11, 2019.
 Comments  
 


Col C K Nayudu Trophy, Tamil Nadu, Delhi, Cricket
 

நத்தம்: டில்லி அணிக்கு எதிரான சி.கே. நாயுடு டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த சி.கே. நாயுடு டிராபி (23 வயது) கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் தமிழகம், டில்லி அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் டில்லி 197, தமிழகம் 286 ரன்கள் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் டில்லி அணி 2 விக்கெட்டுக்கு 17 ரன் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த டில்லி அணிக்கு சர்தாக் ரஞ்சன் (62), குன்வர் பிதுரி (92*) நம்பிக்கை அளித்தனர். மற்றவர்கள் ஏமாற்ற 2வது இன்னிங்சில் டில்லி அணி 192 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. தமிழகம் சார்பில் அஜித் குமார் 6 விக்கெட் கைப்பற்றினார்.

பின், 104 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு முகுந்த் (40), ஹரி நிஷாந்த் (31), கவுஷிக் ராம் (22*) கைகொடுத்தனர். இரண்டாவது இன்னிங்சில் தமிழக அணி 3 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?