Advertisement


ரொனால்டோவுக்கு ‘சோதனை’

ஜனவரி 11, 2019.
 Comments  
 


Cristiano Ronaldo, soccer
 

லாஸ் வேகாஸ்: போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 33. கடந்த யூரோ சாம்பியன்ஷிப்பில் (2016) அணியை வெற்றிகரமாக வழிநடத்தி கோப்பை வென்று தந்தார். யுவன்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். 2009ல் ஓட்டலில் பாலியல் தொல்லை தந்ததாக இவர் மீது அமெரிக்க மாடல் அழகியான காத்ரினா 35, புகார் தந்திருந்தார். இதற்கு ரொனால்டோ மறுப்பு தெரிவித்திருந்தார். இதற்கிடையே, ரொனால்டோவை மரபணு (டி.என்.ஏ.,) சோதனைக்கு ஆஜராகுமாறு லாஸ் வேகாஸ் போலீஸ் ‘வாரன்ட்’ பிறப்பித்துள்ளது.

இது குறித்து லாஸ் வேகாஸ் போலீசார் தரப்பில் வெளியிட்ட செய்தியில்,‘ ரொனால்டோ– காத்ரினா வழக்கில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். ரொனால்டோவை டி.என்.ஏ., சோதனையில் ஈடுபடுத்துவது கட்டாயம்,’என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரொனால்டோ வழக்கறிஞர் பீட்டர் கிறிஸ்டியான்சென் கூறுகையில்,‘‘ கடந்த 2009ல் ஓட்டலில் ரொனால்டோ,  காத்ரினா இருவரும் ஒப்புக்கொண்டுதான் பழகினர். இதனால், ரொனால்டோவின் மரபணு காத்ரினாவிடம் ஒத்துப்போவதில் வியப்பு இல்லை,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?