Advertisement


ஆஸி., ஓபன்: குன்னேஸ்வரன் தகுதி

ஜனவரி 11, 2019.
 Comments [1]  
 


Australia Open Tennis, Prajnesh Gunneswaran, Qualified Singles
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் விளையாட இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் தகுதி பெற்றுள்ளார்.

மெல்போர்னில், நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வரும் 14ல் துவங்குகிறது. இதற்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் 3வது போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ஜப்பானின் யோசுகே வாடானுகி மோதினர்.

‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை 6–7 என இழந்த குன்னேஸ்வரன், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6–4 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6–4 என தன்வசப்படுத்தினார். முடிவில் குன்னேஸ்வரன் 6–7, 6–4, 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பிரதான சுற்றில் விளையாட முதன்முறையாக தகுதி பெற்றார்.

மூன்றாவது வீரர்: இதன்மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஒற்றையர் பிரிவில் விளையாட தகுதி பெற்ற 3வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் குன்னேஸ்வரன். ஏற்கனவே சோம்தேவ் தேவ்வர்மன் (2013 யு.எஸ்., ஓபன்), யூகி பாம்ப்ரி (2018, ஆஸி., ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், யு.எஸ்., ஓபன்) கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் விளையாடினர்.

இதுகுறித்து குன்னேஸ்வரன் கூறுகையில், ‘‘முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் பிரதான சுற்றில் விளையாட இருப்பது மகிழ்ச்சி. எனது நீண்ட நாள் கனவு பலித்தது. முதல் சுற்றுப் போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Saravanan 4 days ago | Report abuse
அருமையான சாதனை. வாழ்த்துக்கள்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?