Advertisement


‘டுவென்டி–20’: இலங்கையை வென்றது நியூசி.,

ஜனவரி 11, 2019.
 Comments  
 


Sri Lanka, New Zealand, T20 Cricket
 

ஆக்லாந்து: இலங்கைக்கு எதிரான ஒரே ஒரு ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதிய ஒரே ஒரு ‘டுவென்டி–20’ போட்டி ஆக்லாந்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (1), டிம் செய்பெர்ட் (2), ஹென்ரி நிகோல்ஸ் (4) ஏமாற்றினர். கோலின் முன்ரோ (16), சான்ட்னர் (13) நிலைக்கவில்லை. பிராஸ்வெல் (44), ராஸ் டெய்லர் (33), ஸ்காட் (35*) கைகொடுத்தனர். நியூசிலாந்து அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு சதீரா சமரவிக்ரமா (0) அதிர்ச்சி துவக்கம் தந்தார். நிரோஷன் டிக்வெல்லா (18), குசால் பெரேரா (23), குசால் மெண்டிஸ் (17) சோபிக்கவில்லை. திசாரா பெரேரா (43) ஆறுதல் தந்தார். தனஞ்செயா டி சில்வா (10), ஷனாகா (7), கேப்டன் மலிங்கா (6) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, இலங்கை அணி 16.5 ஓவரில் 144 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் பெர்குசன், இஷ் சோதி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?