Advertisement


ரஞ்சி கோப்பை: தமிழக அணி ‘டிரா’

ஜனவரி 10, 2019.
 Comments  
 


ranji trophy, tamil nadu, delhi, chennai, draw
 

 சென்னை: தமிழகம்,டில்லி அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை தொடரின்லீக் போட்டி‘டிரா’ ஆனது.

இந்தியாவில் ரஞ்சி கோப்பை தொடர் நடக்கிறது. சென்னையில் நடந்தலீக் போட்டியில் ‘பி’ பிரிவில் காலிறுதி வாய்ப்பை இழந்து விட்ட தமிழகம், டில்லிஅணிகள் மோதின.

தமிழக அணி முதல் இன்னிங்சில்432 ரன்கள் எடுத்தது.மூன்றாவது நாள் முடிவில்டில்லிஅணி முதல் இன்னிங்சில்6 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்து, 164 ரன்கள் பின்தங்கி இருந்தது. ஜான்டி சித்து (104), லலித் யாதவ் (65) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. சாய் கிஷோர் சுழலில் சிக்கிய லலித் (91) சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து அசத்திய சாய் கிஷோர் சுபோத் (0), சைனியை(1) வீழ்த்தினார். டில்லி அணி முதல் இன்னிங்சில் 336 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சித்து (140) அவுட்டாகாமல் இருந்தார். தமிழகத்தின் சாய் கிஷோர் 5 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்த களமிறங்கிய தமிழக அணியின் பாபா அபராஜித் 33 ரன்னுக்கு அவுட்டானார். தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து, 209 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த போது, போட்டி ‘டிரா’ ஆனதாக அறிவிக்கப்பட்டது. ஜெகதீசன் (59), பிரதோஷ் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

இருப்பினும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் தமிழக அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது. ‘எலைட் பி’ பிரிவில் தமிழக அணி 15 புள்ளிகள் பெற்று (8ல் 1 வெற்றி, 5 ‘டிரா’, 2 தோல்வி) 8வது இடம் பிடித்தது.

 

காலிறுதியில் யார்

ரஞ்சி கோப்பை லீக் சுற்று முடிந்த நிலையில் காலிறுதிப் போட்டிகள் வரும் 15ம் தேதி துவங்குகின்றன. இதில் விதர்பா–உத்தரகாண்ட், உ.பி.,–சவுராஷ்டிரா, கர்நாடகா–ராஜஸ்தான், கேரளா–குஜராத் அணிகள் மோதுகின்றன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?