Advertisement


குத்துச்சண்டை: மேரி கோம் ‘நம்பர்–1’

ஜனவரி 10, 2019.
 Comments  
 


World Boxing Ranking, Mary Kom, India, Number One
 

புதுடில்லி: உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீராங்கனை மேரி கோம் (48 கி.கி.,) ‘நம்பர்–1’ இடம் பிடித்தார்.

குத்துச்சண்டை போட்டியில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஏ.ஐ.பி.ஏ.,) வெளியிட்டது. இதில் பெண்களுக்கான 48 கி.கி., எடைப்பிரிவு தரவரிசையில் இந்தியாவின் மேரி கோம் 1700 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டில்லியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் 6வது முறையாக தங்கம் வென்று சாதித்தார். தவிர, கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு மற்றும் போலந்தில் நடந்த சர்வதேச தொடரில் தங்கம் வென்ற மேரி கோம் 36, பல்கேரியாவில் நடந்த தொடரில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

பெண்களுக்கான 51 கி.கி., எடைப்பிரிவு ‘ரேங்கிங்கில்’ இந்தியாவின் பிங்கி ராணி, 500 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா தேவி (64 கி.கி.,) 16வது இடம் பிடித்துள்ளார்.

மற்ற இந்திய வீராங்கனைகளான மணிஷா மவுன் (54 கி.கி., 8வது இடம்), சோனியா லாதர் (57 கி.கி., 2வது இடம்), சிம்ரன்ஜித் கவுர் (64 கி.கி., 4வது இடம்), லவ்லினா (69 கி.கி., 5வது இடம்) ஆகியோர் ‘டாப்–10’ பட்டியலில் உள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?