Advertisement


தாய் போல செய்னா...: காஷ்யப் உருக்கம்

டிசம்பர் 30, 2018.
 Comments  
 


Kashyap, saina
 

ஐதராபாத்: ‘‘நான் போட்டியில் தோற்றால் அம்மாவைப் போல செய்னா கோபப்படுவார். நன்றாக கவனம் செலுத்தி விளையாட வேண்டும் என அறிவுறுத்துவார்,’’ என இந்திய பாட்மின்டன் வீரர் காஷ்யப் தெரிவித்தார்.

திருமணத்தில் இணைந்த உற்சாகத்தில் செய்னா– காஷ்யப் ஜோடி உள்ளது. சிறு வயது முதலே இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். இதனால், போட்டியில் ஒருவருக்கு ஒருவர் வெற்றிக்கான ‘டிப்சை’ பரிமாறிக்கொண்டனர். இது, எதிர்காலத்திலும் தொடர்வது இவர்களின் வெற்றிக்கு மட்டுமில்லாமல் வாழ்க்கைக்கும் உதவும்.

இது குறித்து காஷ்யப் கூறியது: பயிற்சியில் ஈடுபடும் நேரத்தில் இருவரும் பேசிக்கொள்வோம். இதில் கடந்த சில மாதங்களாக மாற்றம் ஏற்பட்டது. ஐதராபாத்தில் செய்னா இருக்கும்போது, அடிக்கடி பேசிக்கொண்டோம். பொதுவாக, ஆட்ட நுணுக்கம், போட்டி முடிவு குறித்து விவாதிப்போம். கடந்த சில ஆண்டிற்கு முன், போட்டியில் தோற்றால் செய்னாவின் குணம் திடீரென மாறிவிடும். எனது தாயை போல மிகவும் கோபப்படுவார். இன்னும் கடினமாக பயிற்சி பெற வேண்டும் என அறிவுறுத்துவார். எனது நண்பர்கள், பொழுதுபோக்கு உள்ளிட்ட விஷயங்களை ஒதுக்குமாறு கூறுவார்.

கோபப்பட்ட செய்னா

போட்டியில் மட்டும் கவனம் இருக்க வேண்டும் என ஆக்ரோஷப்படுவார். எங்களுக்குள் காதல் ஏற்பட்டவுடன், திருமணம் செய்ய முடிவு செய்தோம். ஆனால், அடுத்தடுத்த போட்டியில் பங்கேற்றதால் ஒவ்வொரு முறையும் தள்ளிப்போனது. திருமணம் நல்லபடியாக முடிந்துவிட்டது. இனி, மீண்டும் பாட்மின்டனில் கவனம் செலுத்த துவங்கிவிட்டோம். இவ்வாறு காஷ்யப் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?