Advertisement


உலக ஹாக்கி: காலிறுதியில் இந்தியா

டிசம்பர் 08, 2018.
 Comments  
 


World Cup Hockey, India, Canada, Quarter Final Place, Lalit
 

புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதிக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. ‘சி’ பிரிவு கடைசி லீக் போட்டியில் 5–1 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்தது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், 14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. இதன் ‘சி’ பிரிவு லீக் போட்டியில் உலகின் ‘நம்பர்–5’ இந்திய அணி, 11வது இடத்தில் உள்ள கனடாவை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை ஹர்மன்பிரீத் சிங் வீணடித்தார். பின், 11வது நிமிடத்தில் கிடைத்த 2வது ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் ‘பாஸ்’ செய்த பந்தை ஹர்மன்பிரீத் சிங் கோலாக்கினார். அடுத்த நிமிடத்தில் கிடைத்த 3வது ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை இந்திய வீரர்கள் வீணாக்கினர். முதல் 30 நிமிட முடிவில் இந்திய அணி 1–0 என முன்னிலையில் இருந்தது.

கோல் மழை: பின் எழுச்சி கண்ட கனடா அணிக்கு 39வது நிமிடத்தில் புளோரிஸ் வான் சன் ஒரு ‘பீல்டு’ கோலடித்து 1–1 என சமன் செய்தார். இதற்கு, 46வது நிமிடத்தில் இந்திய வீரர் சிங்லன்சனா ஒரு ‘பீல்டு’ கோல் அடித்து பதிலடி தந்தார். தொடர்ந்து அசத்திய இந்தியாவுக்கு 47வது நிமிடத்தில் லலித் உபத்யாய் ஒரு கோலடித்து 3–1 என வலுவான முன்னிலை பெற்றுத் தந்தார். ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 4வது ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் அமித் ரோஹிதாஸ் தன்பங்கிற்கு ஒரு கோலடித்தார். பின், 57வது நிமிடத்தில் இந்தியாவின் லலித் உபத்யாய் மீண்டும் ஒரு ‘பீல்டு’ கோலடித்தார். கடைசி நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை இந்திய அணியினர் நழுவவிட்டனர்.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5–1 என்ற கணக்கில் 2வது வெற்றியை பதிவு செய்தது.

இந்தியா முதலிடம்

‘சி’ பிரிவு லீக் சுற்றின் முடிவில் 3 போட்டியில், 2 வெற்றி, ஒரு ‘டிரா’ என தலா 7 புள்ளிகளுடன் இந்தியா, பெல்ஜியம் அணிகள் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தன. பின், கோல் வித்தியாச அடிப்படையில் இந்திய அணி (+9) முதலிடத்தை கைப்பற்றி நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியது. பெல்ஜியம் அணி (+5) 2வது இடம் பிடித்து ‘கிராஸ் ஓவர்’ போட்டிக்கு தகுதி பெற்றது.

தலா ஒரு புள்ளியுடன் கனடா, தென் ஆப்ரிக்கா அணிகள் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டிருந்தன. இதில் கோல் வித்தியாச அடிப்படையில் கனடா (–5) 3வது இடம் பிடித்து ‘கிராஸ் ஓவர்’ போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்றது. நான்காவது இடம் பிடித்த தென் ஆப்ரிக்க அணி (–9) வெளியேறியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?