Advertisement


‘பிக்பாஷ்’: சிட்னி சிக்சர்ஸ் வெற்றி

டிசம்பர் 08, 2018.
 Comments  
 


Bigbash League T20, Cricket, Sydney Sixers, Sydney Thunder, Perry
 

சிட்னி: பெண்களுக்கான ‘பிக்பாஷ் லீக் டுவென்டி–20’ தொடருக்கான லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 36 ரன் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தியது.

ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ‘பிக்பாஷ் லீக் டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. சிட்னியில் நடந்த லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ், சிட்னி தண்டர் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு கேப்டன் எலிஸ் பெர்ரி (74), எரின் பர்ன்ஸ் (44) கைகொடுத்தனர். சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.

பின் களமிறங்கிய சிட்னி தண்டர் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் (45), ரெனே பாரெல் (33*) ஆறுதல் தந்தனர். கேப்டன் அலெக்ஸ் பிளாக்வெல் (6), ஸ்டபானி டெய்லர் (13) உள்ளிட்ட மற்ற வீராங்கனைகள் ஏமாற்ற, சிட்னி தண்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 132 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

சிட்னியில் நடந்த மற்றொரு போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் (104/3) அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (103/8) அணியை தோற்கடித்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?