Advertisement


‘சேஸ்’ முடியுமா

டிசம்பர் 08, 2018.
 Comments  
 


starc, australia team
 

அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலிய 200 ரன்னுக்கும் (315/6, எதிர்–இங்கிலாந்து, 1902) மேல் சேஸ் செய்து ஒருமுறை வெற்றி பெற்றது. இதனால் சிறப்பாக விளையாடி குறைந்தது 300 ரன்கள் இலக்கு வைத்தால் இந்திய அணி வெற்றிக்கு முயற்சிக்கலாம்.

* 2000க்குப் பின் இங்கு இந்திய அணி மட்டும் 200க்கும் அதிகமான ரன்களை (233/6) ‘சேஸ்’ செய்து வென்றது. மற்ற அணிகள் ஒருமுறை கூட ‘சேஸ்’ செய்தது இல்லை.

மின்னொளியில்...

அடிலெய்டில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது. வானம் மேகமூட்டமாக இருந்தது. இதனால் போட்டி மின்னொளியில் நடந்தது.

பெய்ன் கோபம்

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சின் கடைசி நேரத்தில் லேசான மழைத் துாரல் இருந்தது. பின் இந்திய அணி பேட்டிங் செய்ய வந்த போது மழை அதிகம் இருப்பதாக கூறி, அம்பயர்கள் உணவு இடைவேளை அறிவித்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பெய்ன் கோபத்துடன் அம்பயர்களுடன் விவாதித்தார்.

கோஹ்லி ஜாலி

மூன்றாவது நாளான நேற்று அவ்வப்போது மழை பெய்தது. இந்திய அணி கேப்டன் கோஹ்லி உற்சாகமாக காணப்பட்டார். பீல்டிங் செய்த போது ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டே நடனம் ஆடினார்.

‘பாரத் ஆர்மி’

இந்திய கிரிக்கெட் அணிக்கு உற்சாகம் தரும் வகையில் ‘பாரத் ஆர்மி’ என்ற பெயரில் ரசிகர்கள் படை ஆஸ்திரேலியாவில் இறங்கியுள்ளது. நேற்று காலை அடிலெய்டு மைதானத்தின் உச்சிக்கு (‘ரூப் டாப்’) சென்ற இவர்கள், பயிற்சிக்கு சென்ற கோஹ்லி உள்ளிட்ட இந்திய வீரர்களைப் பார்த்து,‘ வி ஆர் பாரத் ஆர்மி...’ என்று பாடினர். இதைப் பார்த்த இந்திய வீரர்கள் மகிழ்ந்தனர்.

மழை வருமா

அடிலெய்டில் இன்று காலையில் மட்டும் வானம் மேகமூட்டமாக இருக்கும். மழை வர அதிகபட்சம் 13 சதவீதம் தான் வாய்ப்புள்ளது. கடைசி மற்றும் ஐந்தாவது நாளான, நாளை மழை வராது.

ரசிகர்கள் கோஷம்

நேற்று இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டிங் செய்ய வந்தபோது, ‘கேலரியில்’ இருந்த சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த செயலுக்கு ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தற்போதைய வீரர் டிராவிஸ் ஹெட் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் பும்ரா கூறுகையில்,‘‘ கோஹ்லிக்கு சில ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை நாங்கள் கண்டு கொள்வதில்லை. இம்மாதிரி விஷயத்தை கட்டுப்படுத்தும் அதிகாரமும் எங்களிடம் இல்லை,’’ என்றார்.

6

டெஸ்ட் அரங்கில் கோஹ்லியை அதிகபட்சம் 6வது முறையாக அவுட்டாக்கினார் ஆஸ்திரேலியாவின் லியான். இங்கிலாந்தின் ஆண்டர்சன், பிராட் தலா 5 முறை அவுட் செய்தனர்.

8.33

டெஸ்ட் போட்டிகளில் முரளி விஜய் இரண்டாவது இன்னிங்சில் சொதப்புவது தொடர்கிறது. கடைசி 11 இன்னிங்சில் 3, 0, 7, 2, 8, 9, 13, 9, 25, 6, 0 என ஏமாற்றிய விஜய் நேற்று 18 ரன்னுக்கு அவுட்டானார். இதன் சராசரி 8.33 ரன்.

33

இந்த ஆண்டு அன்னிய மணணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 33 விக்கெட் வீழ்த்தினார். அடுத்த இடங்களில் பும்ரா (30), இஷாந்த் (27), அஷ்வின் (21) உள்ளனர்.

37

கடந்த 1981, மெல்போர்ன் டெஸ்ட் மூன்றாவது இன்னிங்சில் இந்திய அணிக்கு கவாஸ்கர், சேட்டன் சவுகான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. 37 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய மண்ணில் மூன்றாவது இன்னிங்சில் முதல் விக்கெட்டுக்கு ராகுல், முரளி விஜய் ஜோடி 50 ரன்னுக்கும் மேல் (63) சேர்த்தது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?