Advertisement


சதம் கடந்தார் காம்பிர்

டிசம்பர் 08, 2018.
 Comments  
 


gambhir, ranji trophy, cricket
 

புதுடில்லி: ஆந்திர அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் ஜொலித்த டில்லி அணியின் காம்பிர் சதம் கடந்தார்.

இந்தியாவில் ரஞ்சி கோப்பை உள்ளூர் தொடர் நடக்கிறது. டில்லியில் நடக்கும் லீக் போட்டியில் ஆந்திரா, டில்லி அணிகள் மோதுகின்றன. ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 390 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், டில்லி அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்திருந்தது. காம்பிர் (92), கேப்டன் துருவ் சோரே (39) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய காம்பிர் சதம் கடந்தார். தனது கடைசி போட்டியில் சதம் அடித்த இவர் 112 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் துருவ் சோரே (98), ஹிடன் (58) அரை சதம் எட்ட, ஆட்ட நேர முடிவில் டில்லி அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 409 ரன்கள் எடுத்திருந்தது. ஷிவாங் (12) சுபத் (1) அவுட்டாகாமல் இருந்தனர். 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?