Advertisement


இளம் இந்தியா 2வது வெற்றி

டிசம்பர் 08, 2018.
 Comments  
 


Mayank Markande, india team
 

கொழும்பு: ஓமன் அணிக்கு எதிராக அசத்திய இளம் இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் இலங்கை, பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் 23 வயதுக்குட்பட்ட இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுடன், ஓமன், ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என மொத்தம் 8 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

இலங்கையின் கொழும்புவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஓமன் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஓமன் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதித் பந்துவீச்சில் டிவின்கல் (1), ஜடின்டர் சிங் (0) சிக்கினர். மயாங்க் மார்க்கண்டே ‘சுழலில்’ கேப்டன் ஜீசன் (17), முகமது நதீம் (21) சரணடைந்தனர். ஜெயந்த் யாதவ் விரித்த சுழல் வலையில் அஜய் (25), நெஸ்டர் (0) அவுட்டாகினர். அகிப் இல்யாஸ் (117) சதம் கடந்தார். ஓமன் அணி 44.2 ஓவரில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக மார்க்கண்டே 4 விக்கெட் வீழ்த்தினார்.

எட்டிவிடும் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு அதர்வா (18), நிதிஷ் ராணா (0) ஏமாற்றினர். பொறுப்புடன் விளையாடிய அன்குஸ் பெய்ன்ஸ் (83), ஹிமாத் சிங் (63) அரை சதம் கடந்து வெற்றியை எளிதாக்கினர். இந்திய அணி 41.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே, ஆப்கனை வீழ்த்திய இந்தியா இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?