Advertisement


ரஞ்சி: ம.பி., வீரர் உலக சாதனை

டிசம்பர் 08, 2018.
 Comments  
 


Ranji Trophy Cricket, Madhya Pradesh, Hyderabad, Ajay Rohera, World Record
 

இந்துார்: ஐதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் 267 ரன்கள் குவித்த மத்திய பிரதேசத்தின் அஜய் ரொஹேரா, அறிமுக முதல் தர போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.

இந்துாரில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் மத்திய பிரதேச அணி (562/4 ‘டிக்ளேர்’) இன்னிங்ஸ் மற்றும் 253 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை (124/10, 185/10) வீழ்த்தியது.

இப்போட்டியில் அறிமுகமான மத்திய பிரதேச அணியின் துவக்க வீரர் அஜய் ரொஹேரா, 345 பந்தில் 5 சிக்சர், 21 பவுண்டரி உட்பட 267 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் அறிமுக முதல் தர போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார். இதற்கு முன், 1994ல் பரிதாபாத்தில் நடந்த ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் அறிமுகமான அமோல் மஜும்தார் 260 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது.

தவிர, ரஞ்சி கோப்பை வரலாற்றில் ம.பி., அணிக்காக ஒரு இன்னிங்சில் அதிக ரன் (267*) எடுத்த வீரர் என்ற புதிய சாதனை படைத்தார் அஜய் ரொஹேரா, 21. இதற்கு முன், 1999–2000 சீசனில் ரயில்வேஸ் அணிக்கு எதிராக ஜெய் பிரகாஷ் யாதவ் 265 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?