Advertisement


கோஹ்லி ‘1000... 2000’

டிசம்பர் 08, 2018.
 Comments  
 


india vs australia, first test, adelaide, kohli
 

 அடிலெய்டு: ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்காக 1000 டெஸ்ட் ரன்கள் எடுத்த நான்காவது வீரர் ஆனார் கோஹ்லி.

இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்கள், ஆஸ்திரேலியா 235 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் முரளி விஜய் 18, ராகுல் 44 ரன்கள் எடுத்தனர். 

கோஹ்லி 5 ரன்கள் எடுத்த போது, ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக 1000 ரன்கள் எடுத்த நான்காவது வீரர் ஆனார். இதற்கு முன் சச்சின் 1,809, லட்சுமண் 1,236, டிராவிட் 1,143 ரன்கள் எடுத்தனர். 

* இந்த இலக்கை குறைந்த இன்னிங்சில் (18) எட்டிய முதல் இந்திய வீரர் கோஹ்லி தான். அடுத்து லட்சுமண் (19), சச்சின் (22), டிராவிட் (25) உள்ளனர்.

நான்காவது கேப்டன்

சொந்த மற்றும் அன்னிய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்கள் எடுத்த நான்காவது சர்வதேச கேப்டன் ஆனார் கோஹ்லி. இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், பாண்டிங், தென் ஆப்ரிக்காவின் கிரீம் ஸ்மித், இங்கிலாந்தின் அலெஸ்டர் குக், இந்த மைல்கல்லை எட்டினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?