Advertisement


அடிலெய்டு டெஸ்டில் இந்தியா ஆதிக்கம்: ஆஸி., பவுலர்கள் திணறல்

டிசம்பர் 08, 2018.
 Comments  
 


india vs australia adelaide test, kohli
 

அடிலெய்டு: அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்தது.இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது.

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் மழையால் 45 நிமிடம் தாமதமாக துவங்கியது. ஸ்டார்க் (15) பும்ரா வேகத்தில் வீழ்ந்தார். 3.4 ஓவருக்குப் பின் மீண்டும் மழை வர, போட்டி (ஆஸி., 204/8 ரன்) தடைபட்டது. மறுபடியும் துவங்கியதும் ஷமி மிரட்டினார். நேற்றைய இவரது முதல் ஓவரின் 3வது பந்தில் இந்திய அணிக்கு ‘தலைவலியாக’ இருந்த ஹெட் (72) சரிந்தார். 4வது பந்தில் ஹேசல்வுட் ‘டக்’ அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 235 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா, அஷ்வின் தலா 3, இஷாந்த், ஷமி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின் 15 ரன் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. நிதான துவக்கம் தந்த ராகுல், முரளி விஜய் ஜோடி முதல் 8 ஓவரில் 8 ரன்கள் (4 உதிரி) மட்டும் எடுத்தது. 

சுதாரித்துக்கொண்ட ராகுல், கம்மின்ஸ் ஓவரில் சிக்சர், பவுண்டரி என விளாச, அடுத்த 7 ஓவரில் 43 ரன்கள் எடுத்தது இந்தியா. முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த நிலையில் முரளி விஜய் (18) அவுட்டானார். ராகுல் (44) அரைசத வாய்ப்பை இழந்து திரும்பினார்.

கேப்டன் கோஹ்லி, புஜாரா இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து 11வது முறையாக 50 ரன்னுக்கும் மேல் ‘பார்ட்னர்ஷிப்பில்’ சேர்க்க செய்வதறியாது விழித்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன். மூன்றாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த போது லியான் சுழலில் கோஹ்லி (34) வீழ்ந்தார்.

மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து, 166 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. புஜாரா (40), ரகானே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?