Advertisement


உலக ஹாக்கி: காலிறுதி நோக்கி இந்தியா

டிசம்பர் 07, 2018.
 Comments  
 


Simranjeet Singh, india hockey
 

புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இன்று இந்திய அணி, கனடாவை எதிர் கொள்கிறது. இதில் வென்றால் இந்திய அணி நேரடியாக காலிறுதிக்கு முன்னேறலாம்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இந்திய அணி ‘சி’ பிரிவில் பெல்ஜியம், கனடா, தென் ஆப்ரிக்காவுடன் இடம்பிடித்துள்ளது. இன்று கடைசி மற்றும் மூன்றாவது லீக் போட்டியில் கனடாவை எதிர் கொள்கிறது.

இந்திய அணி தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 5–0 என கோல் மழை பொழிந்தது. அடுத்த போட்டியில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பெல்ஜியத்துடன் (2–2) ‘டிரா’ செய்தது. இந்த உற்சாகத்துடன் இன்று களமிறங்குகிறது. தரவரிசையில் நமது அணி (5வது இடம்) கனடாவை (11) விட முன்னிலையில் இருப்பது சாதகம். தவிர, 2013க்குப்பின் கனடாவுக்கு எதிரான 5 போட்டியில் 3 வெற்றி (ஒரு தோல்வி, ஒரு ‘டிரா’) பெற்றிருப்பது நம்பிக்கை தருகிறது.

மிரட்டும் சிம்ரன்ஜீத்

புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் கோல் வித்தியாசத்தில் இந்தியா (4), பெல்ஜியம் (4) உள்ளன. இன்று இந்திய அணி வெற்றி பெற்றால் காலிறுதிக்கு முன்னேறலாம். இதுவரை 3 கோல் அடித்துள்ள சிம்ரன்ஜீத் சிங்கிற்கு கேப்டன் மன்பிரீத், மன்தீப்பின் பங்களிப்பு கிடைத்தால் உள்ளூர் மண்ணில் கலக்கலாம். கடைசி கட்டத்தில் தற்காப்பு பலவீனமாக மாறுவதை தடுக்க வேண்டும். கடந்த போட்டியில் பெல்ஜியம் அணி போட்டி முடியும் 4 நிமிடத்திற்கு முன் (56) கோல் அடித்து வெற்றி வாய்ப்பை பறித்தது. ஹர்மன்பிரீத், பிரேந்திரா விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

கனடாவை பொறுத்தவரை முதல் போட்டியில் பெல்ஜித்திடம் வீழ்ந்தது. அடுத்த போட்டியில் தென் ஆப்ரிக்காவுடன் ‘டிரா’ செய்தது. இதனால், இன்றைய வெற்றிக்கு போராடவே செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?