Advertisement


ஆப்கனை வென்றது இளம் இந்தியா

டிசம்பர் 07, 2018.
 Comments  
 


ACC Emerging Teams Asia Cup, U23 Cricket, India, Afghanistan
 

கொழும்பு: வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணி 74 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் இலங்கை, பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் 23 வயதுக்குட்பட்ட இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுடன், ஓமன், ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் என மொத்தம் 8 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணிக்கு தீபக் ஹூடா (105) கைகொடுக்க 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு கரிம் ஜனத் (58), ஷஹிதுல்லா (47) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற ஆப்கானிஸ்தான் அணி 44.4 ஓவரில் 207 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் மயாங்க் மார்கண்டே, கேப்டன் ஜெயந்த் யாதவ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

இரண்டாவது லீக் போட்டியில் (டிச.8) இந்தியா, ஓமன் அணிகள் மோதுகின்றன.

மற்றொரு ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இலங்கை அணி 109 ரன் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது.

பாக்., வெற்றி

கராச்சியில் நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வென்றது. மற்றொரு போட்டியில் வங்கதேச அணி 28 ரன் வித்தியாசத்தில் ஹாங்காங்கை தோற்கடித்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?