Advertisement


கால்பந்து அணி தலைவருக்கு கொலை மிரட்டல்

டிசம்பர் 07, 2018.
 Comments  
 


Rodolfo, soccer team
 

மாட்ரிட்: ‘‘போகா ஜூனியர்ஸ் கால்பந்து ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்,’’ என, ரிவேர் பிளேட் கால்பந்து அணி தலைவர் ரோடால்ப் தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு சார்பில் கோபா லிபர்டாரோஸ் நடத்தப்படுகிறது. இதன் 59வது ‘சீசன்’ தற்போது நடக்கிறது. பைனலில் அர்ஜென்டினாவை சேர்ந்த போகா ஜூனியர்ஸ், ரிவேர் பிளேட் அணிகள் மோதுகின்றன. முதல் ‘லெக்’ போட்டி 2–2 என ‘டிரா’ ஆனது. இரண்டாவது ‘லெக்’ போட்டி கடந்த நவம்பர் 24ல் அர்ஜென்டினாவின் பியுனோ ஏர்சில் நடக்க இருந்தது. 

ரிவேர் பிளேட் ரசிகர்கள் மோதலில் இறங்கினர். இவர்களின் கல்வீச்சு தாக்குதலில் ஜூனியர்ஸ் அணி பஸ்சில் பயணித்த சில வீரர்கள் காயம் அடைந்தனர். இதனால், போட்டி ஒத்தி வைக்கப்பட்டு, அர்ஜென்டினாவிலிருந்து ஸ்பெயினின் மாட்ரிட் நகருக்கு மாற்றி வைக்கப்பட்டது. இப்போட்டி மாட்ரிட் நகரில் நாளை நடக்கவுள்ளது. இதற்கிடையே, தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக ரிவேர் பிளேட் அணி தலைவர் ரோடால்ப் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ரோடால்ப் கூறுகையில்,‘‘ போகா ஜூனியர்ஸ் அணியின் நுாற்றுக்கணக்கான ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனக்கு மட்டும் இல்லாமல் மனைவி, குழந்தைகளையும் தாக்கப்போவதாக எச்சரித்துள்ளனர். இதனால், கூடுதல் பாதுகாப்பு தரப்பட வேண்டும்,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?