Advertisement


தொடரை வென்றது நியூசி.,: ‘சுழலில்’ சுருண்டது பாக்.,

டிசம்பர் 07, 2018.
 Comments  
 


new zealand cricket team, test cup
 

அபுதாபி: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் சுழற்பந்துவீச்சாளர்கள் கைகொடுக்க நியூசிலாந்து அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரையும் கைப்பற்றியது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்பங்கேற்றன.

முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1–1 என சமநிலையில்இருந்தது.மூன்றாவது டெஸ்ட் அபுதாபியில் நடந்தது

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 274, பாகிஸ்தான் 348 ரன்கள் எடுத்தன.நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று நான்காம் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வில்லியம்சன் 139 ரன்களில் ஆட்டமிழந்தார். நிக்கோல்ஸ் (126*) சதம் கடந்தார். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 353 ரன்கள் எடுத்திருந்தபோது, ‘டிக்ளேர்’ செய்தது. 

280 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது.  சோமர்வில்லி ‘சுழலில்’ ஹாரிஸ் சோகைல் (9), ஆசாத் சபிக் (0) அவுட்டாகினர். பாபர் அசாம் (51) ஆறுதல் தந்தார். அஜாஸ் படேல் சுழற்பந்துவீச்சில் ஹசன் அலி (4) சிக்க, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. இதன் மூலம், நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2–1 என கைப்பற்றியது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?