Advertisement


உலக ஹாக்கி: இங்கிலாந்து வெற்றி

டிசம்பர் 07, 2018.
 Comments  
 


World Cup Hockey, England, Ireland
 

புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 4–2 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் உலகின் ‘நம்பர்–7’ இங்கிலாந்து அணி, 10வது இடத்தில் உள்ள அயர்லாந்தை எதிர்கொண்டது.  அசத்தலாக ஆடிய இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 4–2 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து அணிக்கு டேவிட் கான்டன் (15வது நிமிடம்), லியாம் அன்செல் (37வது), ஜேம்ஸ் கால் (38வது), மார்க் (60வது) தலா ஒரு கோலடித்து கைகொடுத்தனர். அயர்லாந்து அணிக்கு கிறிஸ் கார்கோ (35வது நிமிடம்), ஷேன் (37வது) ஆறுதல் தந்தனர்.

அயர்லாந்து ‘அவுட்’

‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய அணி (9 புள்ளி) நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியது. இதனையடுத்து அடுத்த 2 இடங்களை பிடித்த முறையே இங்கிலாந்து (4 புள்ளி), சீனா (2) அணிகள் ‘கிராஸ் ஓவர்’ போட்டிக்கு தகுதி பெற்றன. கடைசி இடம் பிடித்த அயர்லாந்து அணி (1) வெளியேறியது.

வரும் 10ல் நடக்கவுள்ள ‘கிராஸ் ஓவர்’ போட்டிகளில் பிரான்ஸ் (ஏ2) – சீனா (பி3) மற்றும் இங்கிலாந்து (பி2) – நியூசிலாந்து (ஏ3) அணிகள் மோதுகின்றன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?