Advertisement


ரஞ்சி: தமிழகம் அபார பந்துவீச்சு

டிசம்பர் 07, 2018.
 Comments  
 


Ranji Trophy, Cricket, Tamil Nadu, Kerala, Natarajan
 

சென்னை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக பவுலர்கள் அசத்த, முக்கிய விக்கெட்டுகளை இழந்த கேரள அணி ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், கேரளா அணிகள் மோதுகின்றன. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் தமிழக அணி 6 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்திருந்தது. ஷாருக்கான் (82), முகமது (25) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த தமிழக அணிக்கு சந்தீப் வாரியர் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ முகமது (29), சாய் கிஷோர் (5) அவுட்டாகினர். பசில் தம்பி பந்தில் ராஹில் ஷா (0), நடராஜன் (0) வெளியேறினர்.

முதல் இன்னிங்சில் தமிழக அணி 268 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஷாருக்கான் (92) அவுட்டாகாமல் இருந்தார். கேரளா சார்பில் சந்தீப் வாரியர் 5, பசில் தம்பி 4 விக்கெட் கைப்பற்றினர்.

நடராஜன் நம்பிக்கை: பின் முதல் இன்னிங்சை துவக்கிய கேரள அணிக்கு நடராஜன் நெருக்கடி தந்தார். இவரது ‘வேகத்தில்’ ஜலஜ் சக்சேனா (4), சஞ்சு சாம்சன் (9) போல்டாகினர். ராஹில் ஷா ‘சுழலில்’ அருண் கார்த்திக் (22), கேப்டன் சச்சின் பேபி (1) சிக்கினர். பொறுப்பாக ஆடிய பொன்னம் ராகுல் (59) அரைசதம் கடந்தார். அடுத்து வந்த ஜெகதீசன் (8), விஷ்ணு வினோத் (0), அக்சய் சந்திரன் (14), பசில் தம்பி (2) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் கேரள அணி 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து, 117 ரன்கள் பின்தங்கி இருந்தது. சிஜோமன் ஜோசப் (28) அவுட்டாகாமல் இருந்தார். தமிழகம் சார்பில் நடராஜன், ராஹில் ஷா தலா 3, சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?