Advertisement


அஷ்வின் ‘மூன்று’...இந்தியா நன்று

டிசம்பர் 07, 2018.
 Comments [2]  
 


India vs australia adelaide test cricket, ashwin
 

அடிலெய்டு: அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது ஆஸ்திரேலியா. ‘சுழலில்’ அசத்திய அஷ்வின் மூன்று விக்கெட் வீழ்த்தினார். 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. முகமது ஷமி (6) அவுட்டாகாமல் இருந்தார்.

ஷமி ‘அவுட்’

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஹேசல்வுட் முதல் ஓவரின் முதல் பந்தை பவுன்சராக வீசினார். இதில் ஷமி (6) சிக்க முதல் நாள் ஸ்கோருடன் (250 ரன்கள்) இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பும்ரா (0) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட் 3, ஸ்டார்க், கம்மின்ஸ், லியான் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

இஷாந்த் நம்பிக்கை

அடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இஷாந்த் வீசிய முதல் பந்தின் 3வது பந்தில் ‘ஸ்டம்சுகள்’ பறக்க, பின்ச் ‘டக்’ அவுட்டானார். பும்ரா பந்தில் பவுண்டரி அடித்த ஹாரிஸ், 26 ரன்கள் எடுத்த போது அஷ்வின் சுழலில் சிக்கினார்.  பின் கவாஜா, ஷான் மார்ஷ் இணைந்தனர். உணவு இடைவேளைக்குப் பின் அஷ்வின் வீசிய முதல் ஓவரில் ஷான் மார்ஷ் (2) போல்டானார். அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கோம்ப், ஷமி வீசிய 37வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசினார். 

கைகொடுத்த ‘டி.ஆர்.எஸ்.,’

அஷ்வினின் 14.3 வது ஓவரை எதிர்கொண்டார் கவாஜா. இந்த பந்தை பிடித்த பன்ட், ‘அவுட்’ கேட்டு அப்பீல் செய்ய அம்பயர் தர்மசேனா (இலங்கை) தர மறுத்தார். கோஹ்லி ‘டி.ஆர்.எஸ்.,’ கேட்டார். ரீப்ளேயில் பந்து கவாஜா (28) பெருவிரலில் பட்டுச்சென்றது தெரியவர இந்திய ரசிகர்கள் உற்சாகம் ஆகினர். 

ஹெட் அரைசதம்

அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கோம்ப் (34) பும்ரா ‘வேகத்தில்’ வீழ்ந்தார். கேப்டன் டிம் பெய்னை (5) இஷாந்த் வெளியேற்றினார். ஷமி ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த  டிராவிஸ் ஹெட், சொந்தமண்ணில் முதன் முறையாக அரைசதம் அடித்தார். மீண்டும் வந்த பும்ரா இம்முறை கம்மின்சை (10) அவுட்டாக்கினார். இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. ஹெட் (61), ஸ்டார்க் (8) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய சார்பில் அஷ்வின் 3, இஷாந்த், பும்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Raju Rajendran one day ago | Report abuse
வழமையை மீறி தலைப்பில் மட்டுமாவது தமிழ் விளையாடுது. மகிழ்ச்சி.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Deivasigamani one day ago | Report abuse
முதல் ஆறு விக்கெட்டுகளை நூற்று முப்பது ரன்களுக்கு சுருட்டியபோது ஒரு நல்ல நம்பிக்கை ஏற்பட்டது. ஒரு 75 ரன்கள் முன்னணி பெறலாம் என்று.. ஆனால் வழக்கம் போல நமது பவுலர்கள் துவக்கத்தில் நம்பிக்கை கொடுத்து விட்டு பின்னர் காலை வாரும் வேலையை செவ்வனே செய்கிறார்கள். எட்டாவது வரிசையில் வரும் ஒரு பேட்ஸ்மேன் கடினமான விக்கெட்டில் ஐம்பது பந்துகளை சந்திக்கிறார் என்றால் அதில் தெரிகிறது நமது பவுலர்கள் பலவீனம்.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?