Advertisement


சென்னை அணி 8வது தோல்வி

டிசம்பர் 06, 2018.
 Comments  
 


chennai, mumbai, isl soccer match
 

மும்பை: மும்பை அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி 0–2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) தொடரின் ஐந்தாவது ‘சீசன்’ நடக்கிறது, மும்பையில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை, மும்பை அணிகள் மோதின. போட்டியின் 27வது நிமிடத்தில் மும்பை அணியின் ரபெல் பாஸ்டோஸ் தந்த பந்தை பெற்றார் ரெய்னியர். கச்சிதமாக செயல்பட்ட இவர் கோல்கீப்பரை ஏமாற்றி பந்தை வலைக்குள் அனுப்ப உள்ளூர் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். முதல் பாதியில் சென்னை அணியிடம் 56 சதவீதம் பந்து இருந்தபோதும் 0–1 என பின்தங்கியது.

இரண்டாவது பாதியிலும் சென்னை அணியினர் தற்காப்பு பகுதியில் கோட்டைவிட்டனர். இதைப்பயன்படுத்திய மும்பை வீரர் சாகோ (55வது நிமிடம்) பந்தை தலையால் முட்டி எளிதாக கோல் அடித்தார். கடைசி வரை போராடிய சென்னை அணியின் முயற்சிக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. முடிவில், சென்னை அணி 0–2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இது, சென்னை அணியின் 8வது தோல்வி. இதுவரை விளையாடிய 11 போட்டியில் ஒரு வெற்றி, 2 ‘டிரா’, 8 தோல்வி என, 5 புள்ளியுடன் சென்னை அணி 8வது இடத்தில் உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?