Advertisement


ஐ.பி.எல்., ஏலம்: மேக்ஸ்வெல் விலகல்

டிசம்பர் 06, 2018.
 Comments  
 


IPL T20 Auction, Cricket, Maxwell, Aaron Finch, Australia
 

புதுடில்லி: உலக கோப்பை, ஆஷஸ் டெஸ்ட் தொடர் காரணமாக ஐ.பி.எல்., ஏலத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், ஆரோன் பின்ச் விலகினர்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் வரும் 18ல் நடக்கவுள்ளது. கடந்த சீசனில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் (டில்லி), ஆரோன் பின்ச் (பஞ்சாப்) ஆகியோர் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனால் ஏலத்தில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை (50 ஓவர்) மற்றும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் காரணமாக ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் முடிவை கைவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து இவர்கள் இருவரும் ஏலத்தில் பங்கேற்கவில்லை.

இங்கிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ சாம் குரான், கிறிஸ் வோக்ஸ், இலங்கையின் லசித் மலிங்கா, மாத்யூஸ், தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், கோரி ஆண்டர்சன், ஆஸ்திரேலியாவின் ஷார்ட், இந்தியாவின் ஜெயதேவ் உனத்கட், யுவராஜ் சிங், முகமது ஷமி, அக்சர் படேல், இஷாந்த் சர்மா, விரிதிமன் சகா, சர்பராஸ் கான் உள்ளிட்டோர் ஏலத்தில் பங்கேற்கும் முன்னணி வீரர்கள்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?