Advertisement


ரஞ்சி: இந்திரஜித், ஷாருக் அரைசதம்

டிசம்பர் 06, 2018.
 Comments  
 


Ranji Trophy Cricket, Tamil Nadu, Kerala, Baba Indrajith
 

சென்னை: கேரளாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி கேப்டன் பாபா இந்திரஜித், ஷாருக்கான் அரைசதம் கடந்தனர்.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தமிழகம், கேரளா அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டி நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி கேப்டன் பாபா இந்திரஜித், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

தமிழக அணிக்கு சந்தீப் வாரியர், பசில் தம்பி தொல்லை தந்தனர். சந்தீப் ‘வேகத்தில்’ அபினவ் முகுந்த் (0), பாபா அபராஜித் (3) வெளியேறினார். பசில் தம்பி பந்தில் கவுசிக் காந்தி (16), தினேஷ் கார்த்திக் (4) அவுட்டாகினர். ஜெகதீசன் (21) நிலைக்கவில்லை.

பின் இணைந்த கேப்டன் பாபா இந்திரஜித், ஷாருக்கான் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. பொறுப்பாக ஆடிய இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு 103 ரன் சேர்த்த போது சந்தீப் வாரியர் பந்தில் இந்திரஜித் (87) அவுட்டானார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் தமிழக அணி 6 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்திருந்தது. ஷாருக்கான் (82), முகமது (25) அவுட்டாகாமல் இருந்தனர். கேரளா சார்பில் சந்தீப் வாரியர் 3, பசில் தம்பி 2 விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?