Advertisement


புரோ வாலிபால் ஏலம் எப்போது

டிசம்பர் 06, 2018.
 Comments  
 


Pro Volleyball League, Players Auction, Delhi
 

புதுடில்லி: புரோ வாலிபால் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 14ல் நடக்கவுள்ளது.

இந்திய வாலிபால் கூட்டமைப்பு சார்பில் முதலாவது புரோ வாலிபால் லீக் தொடர் அடுத்த ஆண்டு பிப். 2–22ல் நடக்கவுள்ளது. இதில் சென்னை, மும்பை, ஐதராபாத், ஆமதாபாத், கொச்சி, கோழிக்கோடு என 6 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் சென்னை, கொச்சி நகரங்களில் நடக்கவுள்ளன.

இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 14ல் டில்லியில் நடக்கவுள்ளது. இதில் 117 இந்திய வீரர்கள் உட்பட சில முன்னணி வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்திய வீரர்கள் 4 பிரிவுகளாக (நட்சத்திர வீரர், சீனியர் சர்வதேச வீரர், உள்ளூர் வீரர், 21 வயதுக்குட்பட்ட வீரர்) பிரிக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட உள்ளனர். இந்திய நட்சத்திர வீரர்கள் பட்டியலில் அகின், உக்ர பாண்டியன், தீபேஷ், குரிந்தர் சிங், வினித் குமார், ஜெரோம் வினித், பிரபாகரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் கனடாவின் ரூடி வெர்ஹோப், அமெரிக்காவின் பால் லாட்மன், கார்சன் கிளார்க், டேவிட் லீ, செர்பியாவின் நோவிகா பிஜிலைக்கா, துருக்கியின் டோமிஸ்லேவ் காஸ்கோவிச் ஆகியோர் உள்ளர்.

ஒவ்வொரு அணியிலும் தலா 12 வீரர்கள் இடம் பெற்றிருப்பர். இதில் 2 வெளிநாட்டு வீரர்கள், 2 இந்திய நட்சத்திர வீரர்கள் மற்றும் 2 இளம் இந்திய (21 வயது) வீரர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். மீதமுள்ள 6 வீரர்களை, இந்திய சர்வதேச வீரர்கள், இந்திய உள்ளூர் போட்டி வீரர்கள் பட்டியலில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். தவிர, அதிகபட்சமாக 2 மாற்று வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?