Advertisement


பொங்கி எழுந்த புஜாரா: மீண்டது இந்திய அணி

டிசம்பர் 06, 2018.
 Comments  
 


india vs australia first test match
 
அடிலெய்டு: அடிலெய்டு டெஸ்டில் பேட்டிங்கில் ஜொலித்த புஜாரா சதம் கடந்து கைகொடுக்க, சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி 250 ரன்களை எட்டியது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று அடிலெய்டில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ரோகித் சர்மா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பினார். 

சரிந்த ‘டாப்’

இந்திய அணிக்கு முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. ஸ்டார்க், ஹேசல்வுட் இருவரும் பவுன்சர்களாக வீசி மிரட்டினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் 2 ரன் எடுத்த ராகுல், அடுத்து ஹேசல்வுட் ‘வேகத்தில்’ அவுட்டானார். ஹேசல்வுட் ஓவரில் இப்போட்டியின் முதல் பவுண்டரி அடித்த முரளி விஜய் (11) நிலைக்கவில்லை.

கோஹ்லி ஏமாற்றம்

பெரிய எதிர்பார்ப்புடன் வந்த கோஹ்லி 3 ரன் எடுத்த போது, கவாஜாவின் ‘சூப்பர்’ கேட்ச் காரணமாக திரும்பினார். இம்மைதானத்தில் ஒற்றை இலக்க ரன்னில் இவர் அவுட்டானது இது தான் முதன் முறை. ஹேசல்வுட் பந்தில் பவுண்டரி அடித்தார் புஜாரா. மறுபக்கம் லியான் பந்தை சிக்சருக்கு விரட்டி ஆறுதல் தந்தார் ரகானே. கடைசியில் இவரும் 13 ரன்னுக்கு அவுட்டாக இந்திய அணி 41 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை பறி கொடுத்து தள்ளாடியது. 

ரோகித் அவுட்

அடுத்து ரோகித் சர்மா, புஜாரா இணைந்தனர். கம்மின்ஸ், லியான் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார் ரோகித். ஒருநாள் போட்டிகளைப் போல அவசரப்பட்டு விளையாடிய இவர் 37 ரன்னுக்கு லியான் சுழலில் பொறுப்பற்ற முறையில் அவுட்டாகினார். ரிஷாப் பன்ட் வந்த வேகத்தில் ஸ்டார்க் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி என விளாச இந்திய அணியின் ஸ்கோர் ஒருவழியாக 100 ரன்களை கடந்தது. இந்நிலையில் ரிஷாப் 15 ரன்னுக்கு கிளம்பினார்.

புஜாரா அபாரம்

புஜாரா, அஷ்வின் இணைந்து ஸ்கோரை உயர்த்த உதவினர். 127 ரன்னுக்கு 6 விக்கெட் என தடுமாறிய இந்திய அணிக்காக 7வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த போது அஷ்வின் (35) அவுட்டானார். இஷாந்த் (5) போல்டானார். ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் நிதானமான, உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் புஜாரா. ஹேசல்வுட் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்த இவர் டெஸ்ட் அரங்கில் 16வது, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதம் அடித்தார். புஜாரா 123 ரன்னுக்கு ‘ரன்–அவுட்டாக’ முதல் நாள் ஆட்டம் முடிந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. முகமது ஷமி (6) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், லியான் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?