Advertisement


வரலாறு படைக்குமா இந்திய அணி: இன்று ஆஸி.,யுடன் பலப்பரீட்சை

டிசம்பர் 05, 2018.
 Comments  
 


virat kohli, inida, australia, cup
 

அடிலெய்டு: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் டெஸ்ட் இன்று அடிலெய்டில் ஆரம்பமாகிறது. கேப்டன் விராத் கோஹ்லி மீண்டும் ரன் மழை பொழிய காத்திருக்கிறார். இந்திய பவுலர்களும் மிரட்டும் பட்சத்தில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக தொடரை வெல்லலாம். 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று அடிலெய்டில் துவங்குகிறது. இந்திய அணியை பொறுத்தவரை துவக்க வீரரான தமிழகத்தின் முரளி விஜய் கடந்த நான்கு இன்னிங்சில் அதிகபட்சமாக 20 ரன்கள்தான் எடுத்துள்ளார். பயிற்சி போட்டியில் சதம் அடித்த இவர் மீது நம்பிக்கை வைக்கலாம். இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் சதம் அடித்த (149 ரன்) ராகுல் பலம் சேர்க்கிறார். 

‘கிங்’ கோஹ்லி

மூன்றாவது இடத்தில் வரும் புஜாரா (4 போட்டி, 132 ரன்) கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜொலிக்கவில்லை. டெஸ்ட் ‘ஸ்பெஷலிஸ்ட்’ புஜாரா தன் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அவசியம். ஆணிவேராக கேப்டன் கோஹ்லி திகழ்கிறார். தென் ஆப்ரிக்கா (3 போட்டி, 286 ரன்), இங்கிலாந்து (5 போட்டி, 593) என அன்னிய மண்ணில் நடந்த இரு தொடரிலும் ‘ரன் மெஷினாக’ திகழ்ந்தார். இம்முறை ஆஸ்திரேலிய பவுலர்களை ‘பொடிமாஸ்’ பண்ண காத்திருக்கிறார். ரகானே, கீப்பர் ரிஷாப் பன்ட், ‘ஆல் ரவுண்டர்’ அஷ்வின் ரன் குவிப்புக்கு கைகொடுக்க வேண்டும். 12 பேர் கொண்ட இந்திய அணியில் ஹனுமா விஹாரி இருந்தாலும், அனுபவம் அடிப்படையில் ரோகித் முந்துகிறார். 

கேப்டன் கோஹ்லி இம்முறை ஐந்து பவுலர் ‘பார்முலா’ கடைபிடிக்க வாய்ப்பில்லை. ‘வேகத்தில்’ இஷாந்த், ஷமி, பும்ரா, இருப்பதால் எதிரணிக்கு நெருக்கடி நிச்சயம். ஆடுகளம் ‘சுழலுக்கு’ சாதகமாக இல்லாவிட்டாலும், அஷ்வினின் திறமை வெளிப்பட்டால் விக்கெட் வீழ்த்தலாம். 

கவாஜா நம்பிக்கை

ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித், வார்னர் என இரண்டு ஆபத்தான பேட்ஸ்மேன்கள் இல்லாமல் களமிறங்குகிறது.  துவக்க வீரர் கவாஜா எதிரணியை சோதிக்கும் திறமை படைத்தவர். இரண்டு டெஸ்டில் மட்டுமே விளையாடி இருக்கும் பின்ச் மற்றும் ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கோம்ப் உள்ளிட்டோரை நம்பித்தான் களமிறங்குகிறது. தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த இரண்டு டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா இழந்துள்ளது.  இதற்கு, பரிகாரம் தேட வேண்டிய நெருக்கடியில் கேப்டன் பெய்ன் இருக்கிறார். 

மிட்சல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் என ‘வேகத்தில்’ போட்டுத்தாக்க மூன்று வீரர்கள் உள்ளனர். இவர்களின் மிரட்டல் பந்துவீச்சை சமாளிப்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடினம்தான். அனுபவ லியான் (80 போட்டி, 318 விக்) சுழல் வலை வீச தயார். ஒட்டுமொத்தமாக, இந்திய அணியின் பேட்டிங்கிற்கும், ஆஸ்திரேலியாவின் பவுலிங்கிற்கும் இடையிலான போட்டியாகவே பார்க்கப்படுகிறது. 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?