Advertisement


ஆஸி., மண்ணில் சோகம் தீருமா

டிசம்பர் 05, 2018.
 Comments  
 


India, Australia, Test Cricket
 

அடிலெய்டு: ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று கோஹ்லி தலைமையிலான புதிய வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, 12வது முறையாக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முன்னதாக விளையாடிய 11 தொடர்களில் ஆஸ்திரேலிய அணி 8 முறை (1947–48, 67–68, 77–78, 91–92, 1999–2000, 2007–08, 2011–12, 2014–15) கோப்பை வென்றது. மூன்று முறை (1980–81, 85–86, 2003–04) தொடர் சமன் ஆனது. இந்திய அணி ஒரு முறை கூட தொடரை வென்றதில்லை. இம்முறை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு முதன்முறையாக கோப்பை வென்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

705 ரன்கள்

கடந்த 2004ல் நடந்த சிட்னி டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 705 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

கடந்த 1948ல் நடந்த அடிலெய்டு டெஸ்டில் 674 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.

58 ரன்

பிரிஸ்பேனில், 1947ல் நடந்த டெஸ்டில் 58 ரன்னில் சுருண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த 1981ல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் 83 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டான’ ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

சச்சின் முன்னிலை

இவ்விரு அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் முன்னிலையில் உள்ளார். இவர், 39 டெஸ்டில், 11 சதம், 16 அரைசதம் உட்பட 3630 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (2555 ரன்கள்), இந்தியாவின் லட்சுமண் (2434) உள்ளனர்.

* தற்போதுள்ள இந்திய வீரர்களில் கேப்டன் விராத் கோஹ்லி (1322 ரன்), முரளி விஜய் (1275), புஜாரா (1101) ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்துள்ளனர்.

கிளார்க் அசத்தல்

கடந்த 2012ல் சிட்னியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், 329 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் இவ்விரு அணிகள் மோதிய டெஸ்டில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த வீரரானார். இந்தியா சார்பில் லட்சுமண் (281 ரன், 2001, இடம்: கோல்கட்டா) முன்னிலையில் உள்ளார்.

11 சதம்

இவ்விரு அணிகள் மோதிய டெஸ்டில் அதிக சதமடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இவர், 39 டெஸ்டில் 11 சதமடித்துள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் தலா 8 சதமடித்துள்ள இந்தியாவின் கவாஸ்கர், ஆஸ்திரேலியாவின் பாண்டிங் உள்ளனர்.

* தற்போதுள்ள வீரர்களில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 6, முரளி விஜய் 4 சதமடித்துள்ளனர்.

கும்ளே ‘111’

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் அனில் கும்ளே முதலிடத்தில் உள்ளார். இவர், 20 டெஸ்டில் 111 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் இந்தியாவின் ஹர்பஜன் சிங் (95 விக்கெட்), கபில் தேவ் (79) உள்ளனர்.

* தற்போதுள்ள வீரர்களில் இந்தியாவின் அஷ்வின் (71 விக்கெட்), நாதன் லியான் (64) அதிக விக்கெட் சாய்த்துள்ளனர்.

விக்கெட் வேட்டை

கடந்த 1959ல் கான்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியாவின் ஜாசுபாய் படேல், 35.5 ஓவரில் 69 ரன்கள் வழங்கி, 9 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இவ்விரு அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலரானார்.

ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் (2017), ஜாசன் கிரஜ்ஜா (2008), இந்தியாவின் ஹர்பஜன் சிங் (2001), கபில்தேவ் (1985), அனில் கும்ளே (2004) ஆகியோர் தலா 8 விக்கெட் வீழ்த்தினர்.

சூப்பர் கீப்பர்

இவ்விரு அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர் வரிசையில் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் முன்னிலை வகிக்கிறார். இவர், 18 டெஸ்டில் 75 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் தோனி (71), ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாடின் (58) உள்ளனர்.

கலக்கல் பீல்டர்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ‘கேட்ச்’ செய்த ‘பீல்டர்கள்’ வரிசையில் இந்தியாவின் டிராவிட் முதலிடத்தில் உள்ளார். இவர், 32 டெஸ்டில், 46 ‘கேட்ச்’ செய்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் லட்சுமண் (36), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (36) உள்ளனர்.

வெற்றிக் கூட்டணி

இவ்விரு அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த ஜோடி வரிசையில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஜோடி முன்னிலையில் உள்ளது. கடந்த 2012ல் நடந்த அடிலெய்டு டெஸ்டில் இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 386 ரன்கள் சேர்த்திருந்தது.

அடுத்த இரண்டு இடங்களில் முறையே இந்தியாவின் லட்சுமண்–டிராவிட் (376 ரன், 5வது விக்கெட்), முரளி விஜய்–புஜாரா (370 ரன், 2வது விக்கெட்) ஜோடிகள் உள்ளன.

அனுபவம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக டெஸ்டில் விளையாடிய இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் (39 டெஸ்ட்), டிராவிட் (32), லட்சுமண் (29) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். ஆஸ்திரேலியா சார்பில் இந்தியாவுக்கு எதிராக பாண்டிங் (29 டெஸ்ட்), மைக்கேல் கிளார்க் (22) அதிக டெஸ்டில் பங்கேற்றுள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?