Advertisement


ஐ.பி.எல்., : 70 இடம்... 1003 வீரர்கள்

டிசம்பர் 05, 2018.
 Comments  
 


ipl, cricket, auction
 

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரின் 12வது ‘சீசனுக்கான’ வீரர்கள் ஏலத்தில் 70 இடத்திற்கு 1003 வீரர்கள் போட்டியில் குதிக்க உள்ளனர்.

ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடரின் 12வது ‘சீசன்’ அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், தொடர் அன்னிய மண்ணில் நடக்க வாய்ப்பு அதிகம். ஏற்கனவே, முந்தைய அணிகளிலிருந்து காம்பிர் (டில்லி), கோரி ஆண்டர்சன் (பெங்களூரு) உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இதன்படி, 70 இடங்களுக்கான வீரர்கள் ஏலம் வரும் 18ல் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நடக்கவுள்ளது. மொத்தம் 1003 வீரர்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இதில் 232 சர்வதேச வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தென் ஆப்ரிக்கா ஆதிக்கம்

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் முறையே 35, 27 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதிகபட்சமாக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 59 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்கா, ஹாங்காங், அயர்லாந்து அணிகளிலிருந்து தலா ஒரு வீரர் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக இடம்பெற்றுள்ள 800 அறிமுக வீரர்களில் 746 இந்தியர்கள் அடங்குவர். வழக்கமாக, ஏலத்தை வால்சை சேர்ந்த ரிச்சர்டு மாட்லி நடத்துவர். இம்முறை, இவருக்குப்பதில் ஹியுக் எட்மெட்ஸ் ஏலத்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?