Advertisement


உள்ளூர் போட்டியில் ஓய்வா: தினேஷ் கார்த்திக் பதில்

டிசம்பர் 05, 2018.
 Comments  
 


Dinesh Karthik, india team
 

சென்னை: ‘‘உள்ளூர் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. ரஞ்சி கோப்பையில் தமிழக அணிக்காக சாம்பியன் பட்டம் வென்று தருவதுதான் கனவு,’’ என, இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

இந்திய அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், 33. கடந்த மார்ச்சில் இலங்கையில் நடந்த நிடாஷ் கோப்பை ‘டுவென்டி–20’ பைனலில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு கோப்பை வென்று தந்தார். ஒரு நாள் அணியிலும் இடம்பெற்றுள்ளார். இதனால், உள்ளூர் போட்டியிலிருந்து விடை பெறும் எண்ணம் இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியது: சமீபத்தில், ராயுடு உள்ளூர் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக ஒரு நாள், ‘டுவென்டி–20’ போட்டியில் சாதிக்க உதவியாக அமையும் என தெரிவித்திருந்தார். எனக்கு இம்மாதிரியான எண்ணம் இல்லை. தமிழ்நாடு அணிக்காக உற்சாகமாக விளையாடுகிறேன். எவ்வித பிரச்னையும் இல்லை. தமிழக அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று தருவதுதான் எனது கனவு. இன்னும் எத்தனை ஆண்டுகள் முடியுமோ அதுவரை தமிழகம் சார்பில் பங்கேற்பேன்.

இந்த ஆண்டு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைத்தாலும், உலக கோப்பையை (2019) சிந்தித்து நெருக்கடி ஏற்படுத்த விரும்பவில்லை. சமீபகாலமாக, சர்வதேச போட்டிகளில் ‘பினிஷராக’ இருப்பது உற்சாகம் தருகிறது. இதற்கு ஏற்ப, எனது பயிற்சியிலும் மாற்றம் செய்துள்ளேன். இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?